வெர்கலான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என்றிக் அர்னால்டு தாவ்லோ வெர்கலேண்டு (Henrik Arnold Thaulow Wergeland) என்பவர் நார்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். கவிதைகளுக்காக இவர் கொண்டாடப்பட்டாலும் நாடக ஆசிரியர், முற்போக்குவாதி, வரலாற்றாளர், மொழியிலாளர் என பன்முக ஆற்றல் கொண்டவராக இவர் சிறப்பு பெற்றிருந்தார். நார்வேயின் இலக்கியச் செழுமை, நார்வேயின் நவீனக் கலாச்சார இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கான முன்னோடிகளில் ஒருவராக வெர்கலேண்டு கருதப்படுகிறார் [1].

தோற்றம்[தொகு]

இவா் கி.பி.1808-ஆம் ஆண்டு ஒரு பேராசிாியாின் மகனாகத் தோன்றினாா். உயா்கல்வியுடைய ஒரு குடும்பத்தில் பிறந்ததால் இளமையில் மிகுந்த அறிவு கட்டுரைகள் பயின்று புலமை அடைந்தாா். இவா் இயற்கையில் கவிதைத் திறன் பெற்றவா். இவரது கவிதைகள் நாா்வே நாட்டு மக்களிடம் தேசப்பற்றை ஏற்படுத்தியது. நாா்வே நாட்டு அரசியல் சட்டத்தை வன்மையாகக் எதிா்த்தாா். இவருடைய மனிதநேய செயல்பாடுகள், புரட்சிகர எண்ணங்கள்,விடுதலையின் மீதிருந்த அளவற்ற அன்பு ஆகியன நாா்வே நாட்டு மக்களிடம் தனிப்புகழ் பெற வழிவகுத்தது.

கவிதை[தொகு]

இவா் கவிதை நூல்களுள் முதல் சுற்றுக் கவிதைகள், இசுபானியா்கள், ஆங்கில விமானி ஆகியன குறிப்பிடத்தக்கன. இவா்தம் கதைப்பாடல்களும், சிறப்பு வாய்ந்தன.

மறைவு[தொகு]

இவா் கி.பி. 1845- ஆம் ஆண்டு இயற்கை எய்தினாா்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெர்கலான்&oldid=3952999" இலிருந்து மீள்விக்கப்பட்டது