உள்ளடக்கத்துக்குச் செல்

வெரோனிகா காம்ப்பெல் பிரௌன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெரோனிகா காம்ப்பெல் பிரௌன்
2011 உலக தடகள வாகையாளர் போட்டிகளில் வெரோனிகா கேம்பல்-பிரௌன்
தனிநபர் தகவல்
பிறந்த பெயர்வெரோனிகா காம்ப்பெல்
பிறப்பு15 மே 1982 (1982-05-15) (அகவை 44)
கிளார்க்ஸ் டவுன், தெரேலோனி, ஜமேக்கா
வசிப்பிடம்கிளெர்மான்ட், புளோரிடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
உயரம்1.68 m (5 அடி 6 அங்)[1]
எடை61 kg (134 lb)[1]
விளையாட்டு
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)விரைவோட்டம்
கல்லூரி அணிஅர்கான்சஸ் ரோசர்பெர்க்ஸ்
பதக்கத் தகவல்கள்
Women's தடகள விளையாட்டு
நாடு  ஜமேக்கா
நிகழ்வு முதல் இரண்டாம் மூன்றாம்
கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் 3 3 2
உலக தடகள போட்டிகள் 3 7 1
பொதுநலவாய விளையாட்டுக்கள் 1 4 0
World Indoor Championships 2 0 0
Continental Cup 2 0 0
World Athletics Final 3 1 0
World Relay Championships 1 1 0
World Junior Championships 2 1 0
CAC Junior Championships 4 0 0
Carifta Games 6 1 1
ஒலிம்பிக் விளையாட்டுகள்
தங்கப் பதக்கம் – முதலிடம்2004 ஏதன்சு200 m
தங்கப் பதக்கம் – முதலிடம்2004 Athens4×100 m relay
தங்கப் பதக்கம் – முதலிடம்2008 Beijing200 m
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்2000 Sydney4×100 m relay
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்2012 London4×100 m relay
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்2016 Rio de Janeiro4×100 m relay
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம்2004 Athens100 m
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம்2012 London100 m
World Championships
தங்கப் பதக்கம் – முதலிடம்2007 Osaka100 m
தங்கப் பதக்கம் – முதலிடம்2011 Daegu200 m
தங்கப் பதக்கம் – முதலிடம்2015 Beijing4×100 m relay
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்2005 Helsinki100 m
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்2005 Helsinki4×100 m relay
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்2007 Osaka200 m
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்2007 Osaka4×100 m relay
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்2009 Berlin200 m
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்2011 Daegu100 m
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்2011 Daegu4×100 m relay
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம்2015 Beijing200 m
பொதுநலவாய விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம்2014 Glasgow4×100 m relay
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்2002 Manchester100 m
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்2002 Manchester4 × 100 m relay
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்2006 Melbourne200 m
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்2014 Glasgow100 m
World Indoor Championships
தங்கப் பதக்கம் – முதலிடம்2010 Doha60 m
தங்கப் பதக்கம் – முதலிடம்2012 Istanbul60 m
Continental Cup
தங்கப் பதக்கம் – முதலிடம்2014 Marrakech100 m
தங்கப் பதக்கம் – முதலிடம்2014 Marrakech4x100 m relay
நாடு Americas
World Athletics Final
தங்கப் பதக்கம் – முதலிடம்2004 Monaco100 m
தங்கப் பதக்கம் – முதலிடம்2004 Monaco200 m
தங்கப் பதக்கம் – முதலிடம்2005 Monaco100 m
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்2005 Monaco200 m
World Relay Championships
தங்கப் பதக்கம் – முதலிடம்2015 Nassau4×100 m relay
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்2015 Nassau4×200 m relay
World Junior Championships
தங்கப் பதக்கம் – முதலிடம்2000 Santiago100 m
தங்கப் பதக்கம் – முதலிடம்2000 Santiago200 m
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்2000 Santiago4×100 m relay
CAC Championships
தங்கப் பதக்கம் – முதலிடம்1998 George Town100 m
தங்கப் பதக்கம் – முதலிடம்1998 George Yown4x100 m relay
தங்கப் பதக்கம் – முதலிடம்2000 San Juan100 m
தங்கப் பதக்கம் – முதலிடம்2000 San Juan4x100 m relay
Carifta Games
தங்கப் பதக்கம் – முதலிடம்1997 Bridgetown4x100 m relay
தங்கப் பதக்கம் – முதலிடம்2000 St. George's200 m
தங்கப் பதக்கம் – முதலிடம்2000 St. George's4x100 m relay
தங்கப் பதக்கம் – முதலிடம்2001 Bridgetown100 m
தங்கப் பதக்கம் – முதலிடம்2001 Bridgetown200 m
தங்கப் பதக்கம் – முதலிடம்2001 Bridgetown4x100 m relay
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்2000 St. Georges's100 m
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம்1999 Fort-de-France200 m
World Youth Championships
தங்கப் பதக்கம் – முதலிடம்1999 Bydgoszcz100 m
தங்கப் பதக்கம் – முதலிடம்1999 Bydgoszcz4x100 m relay

வெரோனிகா காம்ப்பெல் பிரவுன் (Veronica Campbell Brown) (பிறப்பு 15 மே 1982) ஜமேக்காவைச் சேர்ந்த ஓர் ஓய்வு பெற்ற தடகள விரைவோட்ட வீரராவார். இவர் 100 மற்றும் 200 மீட்டரில் நிபுணத்துவம் பெற்றவர்.[2] எட்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இவர், 1976 மற்றும் 1980 ஒலிம்பிக்கில் ஜெர்மனியின் பார்பெல் வோக்கலுக்குப் பிறகு, 2016 மற்றும் 2020 ஒலிம்பிக்கில் சக நாட்டுப் பெண்மணி எலைன் தாம்சன்-ஹெரா முன்பு, தொடர்ச்சியாக இரண்டு ஒலிம்பிக் 200 மீ நிகழ்வுகளை வென்ற வரலாற்றில் மூன்று பெண்களில் இரண்டாவது ஆவார்.[3] இளைஞர், இளையோர் மற்றும் மூத்தோர் மட்டங்களில் உலக வாகையாளர் பட்டங்களை வென்ற பதினொரு விளையாட்டு வீரர்களில் (வலேரி ஆடம்ஸ், உசைன் போல்ட், ஆர்மண்ட் துப்லாண்டிஸ், ஜாக் பிரீடாக், யெலேனா ஐசின்பாயேவா, கிரானி ஜேம்ஸ், பெய்த் கிப்யேகன், ஜானா பிட்மேன், டானி சாமுவேல்ஸ் மற்றும் டேவிட் ஸ்டோர்லஸ் ஆகியோருடன்) கேம்பெல்-பிரௌனும் ஒருவர்.

இவர் 100 மீட்டரில் 10.76 வினாடிகளிலும், 200 மீட்டரில் 21.74 வினாடிகளிலும் தனது தனிப்பட்ட சாதனைகளைக் கொண்டுள்ளார். இவர் 2007 உலக தடகள போட்டிகளில் 100 மீட்டரில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மேலும், 2011 உலக தடகளப் போட்டியில் 200 மீட்டர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 60 மீட்டருக்கு மேல், உலக தடகள அமைப்பு நடத்தும் உலக உள்ளரங்க வாகையாளர் போட்டியில் இரண்டு முறை வாகை சூடியுள்ளார்.

இளமை வாழ்க்கை

[தொகு]
2009 உலக தடகளப் போட்டியில் வெரோனிகா காம்ப்பெல் பிரௌன்

காம்ப்பெல் 1982 மே 15 அன்று ஜமேக்காவின் தெரேலோனியில் உள்ள கிளார்க்ஸ் டவுனில் செசில் காம்ப்பெல் மற்றும் பமீலா பெய்லி ஆகியோருக்கு பிறந்தார்.[4] இவருக்கு ஐந்து சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகள் உள்ளனர், மேலும் அமெரிக்காவில் ஆர்கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைத் தொடர்வதற்கு முன்பு கிளாரெண்டனில் உள்ள திராய் பள்ளி மற்றும் வெரே டெக்னிகல் உயர்நிலைப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பயின்றார்.

தடகளம்

[தொகு]

1999 ஆம் ஆண்டில், சர்வதேச தடகள கூட்டமைப்புகள் சங்கம் நடத்திய உலக இளைஞர் தடகளப் போட்டியில் 100 மீ.  மற்றும் 4 x 100 மீ தொடரோட்டம் ஆகிய இரண்டிலும் தங்கப் பதக்கங்களை வென்றார். அடுத்த ஆண்டு, உலக இளையோர் தடகளப் போட்டியில் விரைவோட்டத்தில் முதலிடம் பிடித்த பெண் ஆனார். 100 மீட்டரை 11.12 வினாடிகளிலும், (இது அந்த நேரத்தில் ஒரு சாதனையாக இருந்தது) 200 மீட்டரை 22.87 வினாடிகளிலும் கடந்தார். 2000 ஒலிம்பிக் போட்டிகளில், வெள்ளிப் பதக்கம் வென்ற 4 x 100 மீட்டர் ரிலே அணியில் இரண்டாவதாக ஓடினார். 2001 ஆம் ஆண்டில், 2001 கரிஃப்டா விளையாட்டுகளின் மிகச்சிறந்த தடகள வீரருக்கான ஆஸ்டின் சீலி கோப்பையை இவர் பெற்றார்.[5][6] அந்த ஆண்டு, இளையோர் (யு-20) பிரிவில் 3 தங்கப் பதக்கங்களை (100 மீ, 200 மீ, மற்றும் 4 × 100 மீ தொடரோட்டம்) வென்றார்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

2007 ஆம் ஆண்டில், காம்ப்பெல் சக ஜமேக்கா தொடரோட்ட வீரரும் ஆர்கன்சாஸ் பல்கலைக்கழக முன்னாள் மாணவருமான ஓமர் பிரவுன் என்பவரை மணந்தார். தனது பெயரை காம்ப்பெல்-பிரௌன் என்று மாற்றிக் கொண்டார். இவர்கள் தற்போது புளோரிடாவின் கிளர்மோண்டில் வசித்து பயிற்சி பெறுகிறார்கள். 2009 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின்நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்ட இவர், விளையாட்டில் பாலின சமத்துவத்தை மேம்படுத்த இந்த பாத்திரத்தைப் பயன்படுத்துவதாகக் கூறினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "IAAF: Veronica CAMPBELL-BROWN - Profile". iaaf.org. Archived from the original on 19 March 2020. Retrieved 12 March 2009.
  2. "Athlete Biography: CAMPBELL-BROWN Veronica". Beijing2008.cn. The Beijing Organizing Committee for the Games of the XXIX Olympiad. Archived from the original on 2008-08-25. Retrieved 30 August 2008.
  3. "2008 SUMMER OLYMPICS : Campbell-Brown wins 200-meter gold in Beijing - Veronica Campbell Brown - Zimbio". Archived from the original on 5 October 2012. Retrieved 23 August 2008.
  4. "LIFE - TIME". Archived from the original on 7 October 2014 via time.com.
  5. Carifta Games Magazine, Part 2 (PDF), Carifta Games 2011, archived from the original (PDF) on 25 April 2012, retrieved 12 October 2011
  6. Carifta Games Magazine, Part 3 (PDF), Carifta Games 2011, archived from the original (PDF) on 25 April 2012, retrieved 12 October 2011

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Veronica Campbell-Brown
என்பதில் ஊடகங்கள் உள்ளன.