வெய் யி
| வெய் யி Wei Yi | |
|---|---|
2025 இல் வெய் யி | |
| நாடு | சீனா |
| பிறப்பு | 2 சூன் 1999 யான்செங், சியாங்சு, சீனா |
| பட்டம் | சதுரங்கப் பேராதன் (2013) |
| பிடே தரவுகோள் | 2729 (திசம்பர் 2021) |
| உச்சத் தரவுகோள் | 2763 (அக்டோபர் 2024) |
| தரவரிசை | இல. 21 (திசம்பர் 2021) |
| உச்சத் தரவரிசை | No. 7 (மார்ச் 2025) |
வெய் யி (Wei Yi, சீனம்: 韦奕; பிறப்பு: 2 சூன் 1999) ஒரு சீன சதுரங்கப் பேராதன் ஆவார். வெய் தனது 13-ஆவது அகவையில் (13 ஆண்டுகள், 8 மாதங்கள், 23 நாட்களில்) பேராதன் ஆனார், வரலாற்றில் இச்சாதனையை எட்டிய 9வது இளைய வீரர் ஆவார்.[1][2] 2700 மதிப்பீட்டை எட்டிய இளைய வீரர் இவர், 15 வயதில் இந்த சாதனையை நிகழ்த்தினார்.[3][4] வெய் சீன சதுரங்க லீக்கில் [3][4] அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மூன்று முறை சீன சதுரங்க வாகையாளராகவும், 2018 ஆசிய சதுரங்க வாகையாளராகவும் உள்ளார்.[5] வெய் 2024 இல் டாட்டா ஸ்டீல் மாஸ்டர்சு சுற்றில் வென்றார்.[6]
வெய் 2025 டாட்டா ஸ்டீல் சதுரங்க வாகைப் போட்டியில் 7 புள்ளிகள் பெற்று 6-ஆவதாக வந்தார். 2025 பிராகா பன்னாட்டு சதுரங்க விழாவில் 3-ஆவதாக வந்தார்.
2025 சதுரங்க உலகக் கோப்பையில், வெய் யி இரண்டாம் சுற்றில் காசுப்பர் பியோரனை 2-0 ஆக வென்றார்[7] பின்னர் இவர் பெஞ்சமின் கிளெதுராவை 2.5-1.5 ஆகவும், பார்கம் மக்சூத்லூவை 5-3 ஆகவும், சாமுவேல் செவியானை 1.5-0.5 ஆகவும் முறையே மூன்றாம், நான்காம், ஐந்தாம் சுற்றுகளில் வென்றார்.[8][9][10] காலிறுதிப் போட்டியில் அர்ச்சூன் எரிகாய்சியை 2.5-1.5 ஆக வென்று அரையிறுதிக்கு முதல் தடவையாகத் தகுதி பெற்றார்.[11]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]வெய் 1999 சூன் 2 இல் சீனாவில் சியாங்சு, யான்செங்கில் பிறந்தார்.[12] 2018 இல் சிங்குவா பொருளியல், முகாமைத்துவப் பல்கலைக்கழகக் கல்லூரியில் கல்வி கற்று,[13] 2024 சூலையில் பட்டம் பெற்றார்.[14]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Wei Yi has become the youngest GM in the world". ChessBase. 1 March 2013. Retrieved 2013-08-13.
- ↑ "Certificate of Title Result (Reykjavik 2013)" (PDF). FIDE. Retrieved 2013-08-23.
- ↑ 3.0 3.1 "March 2015 ratings: After 26 years, Yifan no.1". ChessBase. 28 February 2015. Retrieved 2016-01-18.
- ↑ 4.0 4.1 "Wei Yi Wins in Danzhou, Climbs to World #14". 18 July 2017.
- ↑ Chinese Chess League: Wei Yi OlimpBase
- ↑ "Wei Yi wins 2024 Tata Steel Masters". பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (in ஆங்கிலம்). 2024-01-28. Archived from the original on 2024-01-29. Retrieved 2024-01-29.
- ↑ "World Cup Round 2 Game 1: Gukesh debuts, Aronian and Wei Yi shine, Faustino continues to amaze". 4 November 2025.
- ↑ "2025-fide-world-cup-round-3-tiebreaks". 13 November 2025.
- ↑ "2025-fide-world-cup-round-4-game-2". 13 November 2025.
- ↑ "World Cup: Arjun, Wei, Sindarov and Yakubboev advance to quarterfinals". 15 November 2025.
- ↑ "Wei Yi Knocks Out Arjun, Advances With Sindarov, Esipenko". 20 November 2025.
- ↑ "The Top Chess Players in the World: Wei Yi". Chess.com. Archived from the original on 28 March 2025.
- ↑ "韦奕:六年超霸战对我帮助很大 祝学弟柯洁早毕业". sports.sina.com.cn. 2 July 2019.
- ↑ Barden, Leonard (February 2, 2024). "Chess: Wei Yi wins at Wijk aan Zee as former prodigy emerges from shadows". The Guardian.
வெளி இணைப்புகள்
[தொகு]- வெய் யி rating card at பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு
- வெய் யி player profile at Chess.com
- வெய் யி player profile and games at Chessgames.com
- Wei Yi chess games at 365Chess.com