வெப்மெத்தெட்ஸ் உருவாக்குநர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெப்மெத்தெட்ஸ் உருவாக்குநர் ஜாவா-சார்ந்த ஒருங்கிணைந்த தொகு சூழல் (IDE). இதன் மூலம் குறியீட்டை வெப்மெத்தெட்ஸ் ஒருங்கிணைப்பு வழங்கியில் வடிவமைக்கலாம்.

இவை வெப்மெத்தெட்ஸ் தொடர்ச்சி எனும் வரைகலை நிரலாக்க மொழியை பயன்படுத்தி ஒருங்கிணைந்த பயன்பாட்டு வடிவமைப்பை எளிய முறையிலும் மிக வேகமாகவும் வடிவமைக்க உதவுகின்றன.[1] வெப்மெத்தெட்ஸ் தனது 7 ஆவது பதிப்பின் மூலம் வெப்மெத்தெட்ஸ் வடிவமைப்பானை அறிமுகப்படுத்தியுள்ளது .இந்த வடிவமைப்பபான் எக்லிப்ஸ் ஐ அடிப்படையாகக்கொண்ட ஐ.டி இ (IDE ).

இவற்றின் மூலம் தன்னகத்தே குறியீட்டை சேமித்து அதை செயல்படுத்த முடியாது. இவை ஒருங்கிணைந்த வழங்கியில் ஒரு பயனரே ஆகும். இவை அந்த ஒருங்கிணைந்த சர்வருக்கு கட்டளையிட்டு செயல்களை செய்துமுடிக்கின்றன.

நிரல் அம்சங்கள்[தொகு]

வெப்மெத்தெட்ஸ் படைப்பாளி பின்வரும் தொகுக்கும் வசதிகளை கொண்டுள்ளன:[1][2]

  • வெப்மெத்தெட்ஸ் தொடர்ச்சி மற்றும் ஜாவா சேவைகளை தொகுக்கலாம். (நிரலாக்க தர்க்கம்)
  • ஆவணங்களை உருவாக்கி அதை வசதிக்கேற்ப மாற்றி முகப்புதல் செய்யலாம்.
  • சோதனை, நீக்கல் மற்றும் இயக்கும் சேவைகள்
  • வலை சேவைகள் உருவாக்கம் மற்றும் கட்டமைப்பு
  • தொகுக்கும் பொருத்தி சேவை மற்றும் அறிவிப்புகள் (வெளி அமைப்புகளுடணான தொடர்பு )

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 webMethods Business Integration – Detailed Features Page
  2. "webMethods Adapters Datasheet" (PDF). Archived from the original (PDF) on 2007-09-28. பார்க்கப்பட்ட நாள் 2016-09-16.

வெளி இணைப்புகள்[தொகு]