வெப்ப இயக்கவியலின் சுழிய விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெப்ப இயக்கவியலின் சுழிய விதி (Zeroth law of thermodynamics) இரு பொருட்களின் தொடுகையின் போது அவற்றுக்கு இடையேயான வெப்பச்சமநிலை பற்றி கூறுகிறது, அதாவது இரு தொகுதிகள், மூன்றாவது தொகுதியுடன் வெப்பச்சமநிலையில் இருந்தால் அவை இரண்டும் தமக்கிடையே வெப்ப சமநிலையில் இருக்கும். இரு தொகுதிகள் தொடுகையில் உள்ள போது வெப்பப்பரிமாற்றம் நிகழாவிடின் அவை வெப்பச் சமநிலையில் உள்ளன எனப்படும். வெப்பநிலை எனும் கணியத்திற்கான தேவையை பூச்சிய விதி உணர்த்துகிறது. அதாவது வெப்பச்சமநிலை வெப்பநிலை எனும் கணியத்திலேயே தங்கி உள்ளது. ஒரே வெப்பநிலையில் உள்ள இரு தொகுதிகள் தமக்கிடையே வெப்பச்சமநிலையில் இருக்கும். இவ்விதி வெப்பமானியின் உருவாக்கத்திற்கு மூலமாக அமைகிறது.[1]

சமநிலைத் தொடர்பாக சுழிய விதி[தொகு]

ஒரு தொகுதியின் வெப்ப ஆற்றலில் நிகர மாற்றம் உணரப்படாத போது அது வெப்பச்சமநிலையில் இருக்கும் எனப்படுகிறது. A, B, மற்றும் C என்பன வெவ்வேறு வெப்பத்தொகுதிகளாக இருக்கும் போது, வெப்ப ஆற்றலின் சுழிய விதியை பின்வருமாறு வெளிப்படுத்தலாம்:[2]

"A மற்றும் C ஒவ்வொன்றும் B உடன் வெப்பச்சமநிலையில் இருக்க, A ஆனது C உடன் சமநிலையில் இருக்கும்"

மேற்கோள்கள்[தொகு]

  1. Reif, F. (1965). "Chapter 3.5: Temperature". Fundamentals of Statistical and Thermal Physics. New York: McGraw-Hill. பக். 102ff. https://archive.org/details/fundamentalsofst00fred. 
  2. Chris Vuille; Serway, Raymond A.; Faughn, Jerry S. (2009). College physics. Belmont, CA: Brooks/Cole, Cengage Learning. பக். 355. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-495-38693-6. 

மேலதிக வாசிப்பு[தொகு]