வெப்பமண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உலக வரைபடத்தில் வெப்பமண்டலப் பிரதேசமானது சிவப்பு நிறத்தால் குறிக்கப்பட்டுள்ளது
ஒரு ஆண்டின் 12 மாதங்களுக்குமான சராசரி வெப்பநிலை 18 °C (64 °F) ஆகக் கொண்ட புவியின் வெப்பமண்டலப் பிரதேசங்கள்

வெப்ப மண்டலம் அல்லது அயன மண்டலம் (Tropical Zone) என்பது, ஒரு வகைப் புவியியல் பிரதேசத்தைக் குறிக்கும் சொல்லாகும். இது இலங்கையில் அயன மண்டலம் எனப்படுகிறது. இப் பகுதிகள் புவிமையக் கோட்டை மையப்படுத்தி, கடகக் கோட்டுக்கும், மகரக் கோட்டுக்கும் இடையில் இருக்கின்றன. இது வெப்ப வலயம் என்றும் அழைக்கப்படுவதுண்டு.

இப்பகுதிகள், அண்ணளவாக, 23°30'/23.5° வடக்கு, மற்றும் 23°30'/23.5° தெற்கு ஆகிய அகலக்கோடுகளிடையே கிடக்கிறது.

பருவகாலமும், காலநிலையும்[தொகு]

பொதுவாக மிதமான வெப்பத்தில் இருந்து, சூடான வெப்பத்தைக் கொண்டதும், ஆண்டு முழுவதும் ஈரப்பதனுள்ளதுமான காலநிலையைக் கொண்டிருக்கும். இதனால் ஆண்டு முழுமைக்கும் பசுமையான தாவரத் தொகுதியை (Vegetation) கொண்டிருக்கும். அனேகமான வெப்பமண்டலப் பிரதேசங்கள் மழைக்காலம், மழையற்ற உலர்காலம் என்ற இரு முக்கியமான வேறுபடுத்தக் கூடிய பருவ காலங்களையே கொண்டிருக்கும். மழைக்காலமானது மாரிகாலம் எனவும் உலர்காலமானது கோடைகாலம் எனவும் அழைக்கப்படும். மிதவெப்பமண்டலத்தில் போல் முழுமையாக வேறுபடுத்தக்கூடிய நான்கு பருவகாலங்கள் இங்கே காணப்படுவதில்லை. ஆனாலும், இங்கே ஓரளவு இலையுதிர்வு ஏற்படக் கூடிய காலங்களை இலையுதிர்காலம் எனவும், இலைகள் துளிர்க்கும் காலத்தை இளவேனிற்காலம் எனவும் அழைப்பர். ஒப்பீட்டளவில் வெப்பநிலை குறைந்திருக்கும் காலத்தை குளிர்காலம் என்றும் அழைப்பார்கள்.

வெப்ப மண்டல நாடான பிலிப்பெய்ன்ஸில், நற்பகலில் மரங்களின் நிழல் நேராக விழும் காட்சி

சூழ்நிலை மண்டலம்[தொகு]

வெப்பமண்டல காலநிலை கொண்ட பிரேசில் நாட்டில் தென்னை மரங்கள்
Fond St-Denis, Martinique க்கு அருகிலுள்ள வெப்பமண்டலக் காடு


"http://ta.wikipedia.org/w/index.php?title=வெப்பமண்டலம்&oldid=1465757" இருந்து மீள்விக்கப்பட்டது