வெப்பநிலையால் மூலக்கூறுகளின் இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெப்பநிலையால் மூலக்கூறுகளின் இயக்கம்


1. வெப்பம் கடத்தல்


அதிக வெப்பநிலையில் உள்ள ஒரு பொருளிலிருந்து குறைவான வெப்ப நிலையில் உள்ள ஒரு பொருளுக்கு அவை ஒன்றொடொன்று தொடும்போது மூலக்கூறுகளின் இயக்கமின்றி பரவும் நிகழ்ச்சி வெப்ப கடத்தல் எனபபடும்.

2. வெப்ப சலனம்

பாய்மங்களை ( திரவங்கள் மற்றும் வாயுக்கள் வெப்பபடுத்தும் போது வெப்ப மூலத்திற்கு அருகில் உள்ள மூலக்கூறுகள் முதலில் வெப்பமடைந்து விரிவடைகின்றன.இதனால் அவற்றின் அடர்த்தி குறைகிறது. இத்தகைய மூலக்கூறுகள் மேலே செல்ல கனமான மூலக்கூறுகள் கீழே வெப்ப மூலத்திற்கு அருகில் வருகின்றன.இங்கு மூலக்கூறுகளின் இயக்கம் உள்ளது. இவ்வாறு மூலக்கூறுகளின் உண்மையான இயக்கத்தால் வெப்பம் பரவும் முறை வெப்பச் சலனம் எனப்படும். காற்று வீசுதல் என்பது காற்றில் ஏற்படும் வெப்ப சலனத்தால் ஏற்படும் நிகழ்வாகும்.

3.வெப்ப கதிர்வீசல்

வெப்பம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வித பருப்பொருள் ஊடகமும் இன்றி பரவும் முறைக்கு வெப்ப கதிர்வீசல் என்று பெயர்.

பின்னூட்டம்

வெப்ப நிலையால் மூலக்கூறுகளின் இயக்கத்தில் வெப்பம் பரவுவதில் மேற்கண்ட வெப்ப கடத்தல், வெப்ப சலனம், வெப்ப கதிர்வீசல் முக்கிய இடம் பெருகின்றன.

மேற்கோள்

1.பொருளறிவியல் கற்பித்தல் முறைகள் panneerselvam

2.தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு 2005