உள்ளடக்கத்துக்குச் செல்

வெபரின் பாய்மரப் பல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெபரின் பாய்மரப் பல்லி
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
பிரிவு:
முதுகுநாணி
வகுப்பு:
ஊர்வன
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கைட்ரோசொரசு
இனம்:
கை. வெபெரி
இருசொற் பெயரீடு
கைட்ரோசொரசு வெபெரி
பார்போர், 1911[1]

வெபரின் பாய்மரப் பல்லி (Weber's sailfin lizard) அல்லது கல்மகோரா பாயமரத்துடுப்பு டிராகன் (கைட்ரோசொரசு வெபெரி) என்பது அகமிடே குடும்பத்தில் உள்ள பல்லி சிற்றினமாகும். இந்தச் சிற்றினம் இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

புவியியல் வரம்பு

[தொகு]

கை. வெபெரி கல்மகோரா மற்றும் மலுக்குவின் டெர்னேட் தீவுகளில் மட்டுமே காணப்படுகிறது.[1]

ஆயுள்

[தொகு]

கை. வெபெரியின் ஆயுட்காலம் 10 முதல் 15 ஆண்டுகள் வரை இருக்கும்.[2]

விளக்கம்

[தொகு]

கை. வெபெரி என்பது கைட்ரோசொரசு பேரினத்தின் மூன்று அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்களில் மிகச் சிறியது. இதன் சராசரி மொத்த நீளம் (வால் உட்பட) 2–3 அடி (0.61–0.91 m) ஆகும். 

உணவு

[தொகு]

கை. வெபெரி அனைத்துண்ணி வகையினைச் சார்ந்தது. எந்த விலங்கைத் தின்றுவிட முடியுமோ அதைத் தின்னும் தன்மையுடையது. பலவகையான தாவரங்களையும் பழங்களையும் உட்கொள்கிறது.

கொல்லைப்படுத்தல்

[தொகு]

கொல்லைப்படுத்தப்பட்ட நிலையில், கை. வெபெரியின் இளம் உயிரிகள் பொதுவாக 60% பூச்சி / 40% தாவர உணவுகளின் உதவியால் பராமரிக்கப்படுகின்றன. முதிர்ச்சியடைந்தவை தோராயமாக 75% தாவரங்களையும் 25% பூச்சிகளையும் மற்ற தாவரமற்ற உயிரினங்களையும் உட்கொள்கின்றன.

இனப்பெருக்கம்

[தொகு]

கை. வெபெரி முட்டையிட்டு குஞ்சுப் பொறிக்கக்கூடியவை.[1]

சொற்பிறப்பியல்

[தொகு]

இதனுடைய சிற்றினப்பெயரான வெபெரி, ஜெர்மன்-இடச்சு விலங்கியல் நிபுணர் மேக்சு வில்ஹெல்ம் கார்ல் வெபர் வான் போசின் நினைவாக இடப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 {{Denzer W, Campbell PD, Manthey U, Glässer-Trobisch A, Koch A. FIGURE 8 in Dragons in neglect: Taxonomic revision of the Sulawesi sailfin lizards of the genus Hydrosaurus Kaup, 1828 (Squamata, Agamidae). Zootaxa 4747(2) 275-301. January 2020. doi:10.5281/zenodo.3694822
  2. "Exoticpetia.com". Archived from the original on 2009-10-01. பார்க்கப்பட்ட நாள் 2022-09-26.
  3. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. (Hydrosaurus weberi, p. 280).

வெளி இணைப்புகள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
  • Barbour T (1911). "New Lizards and a New Toad from the Dutch East Indies, with Notes on Other Species". Proceedings of the Biological Society of Washington 24: 15–22. (Hydrosaurus weberi, new species, pp. 20–21).
  • Barts M, Wilms T (2003). "Die Agamen der Welt". Draco 4 (14): 4-23. (in German).
  • Colwell GJ (1993). "Hydrosaurus weberi (Weber's sail-fin dragon)". Morphology Herpetological Review 24 (4): 150.
  • de Rooij N (1915). The Reptiles of the Indo-Australian Archipelago. I. Lacertilia, Chelonia, Emydosauria. Leiden: E. J. Brill. xiv + 384 pp.
  • Gábris J (2003). "Zur Haltung von philippinischen Segelechsen (Hydrosaurus pustulatus)". Draco 4 (14): 24–33. (in German).
  • Werning H (2002). Wasseragamen und Segelechsen. Münster: Natur und Tier Verlag. 127 pp. (in German). [review in Sauria 26 (4): 17.]
  • Werning H (2004). "Bibliographie der Gattungen Physignathus, Lophognathus und Hydrosaurus". Iguana Rundschreiben 17 (2): 18–31. (in German).
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெபரின்_பாய்மரப்_பல்லி&oldid=3592066" இலிருந்து மீள்விக்கப்பட்டது