வென்வேலான் குன்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வென்வேலான் என்னும் தொடர் வெற்றிவேலை வைத்துக்கொண்டிருக்கும் முருகனைக் குறிக்கும். குறிஞ்சித்தெய்வமாகப் போற்றப்படும் முருகனின் படைவீடாகக் குன்றுதோறாடல் குறிப்பிடப்படுகிறது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மங்கலதேவி கண்ணகி கோயில் உள்ள மலை வென்வேலான் குன்று எனக் கருதுகின்றனர்.[1]

மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் வென்வேலான் குன்று எனப் போற்றப்படுகிறது. [2] [3]

அடிக்குறிப்பு[தொகு]

  1. கண்ணகி மதுரையை எரித்தபின் வையை ஆற்றின் வடகரை வழியைப் பின்பற்றிச் சென்றாள். வென்வேலான் குன்றின்மீது ஏறி விண்ணகம் புகுந்தாள். வென்வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன் என்று கூறிவிட்டுச் சென்றாள். சிலப்பதிகாரம் வாழ்த்துக்காதை உரைப்பாட்டுமடை, பாடல் 10
  2. வென்வேலான் குன்றில் விளையாட்டு விரும்பார்கொல் – கலித்தொகை 27
  3. வென்வேலாற்கு ஒத்தன்று தண்பரங்குன்று பரிபாடல் 9-68
"https://ta.wikipedia.org/w/index.php?title=வென்வேலான்_குன்று&oldid=928845" இருந்து மீள்விக்கப்பட்டது