வென்ற்வேத்வில், நியூ சவுத் வேல்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வென்ற்வேத்வில்
சிட்னிநியூ சவுத் வேல்ஸ்
Wentworthville-1-wiki.jpg
ரயில்ப் பாலத்திலிருந்து
மக்கள் தொகை: 11,318
அமைப்பு: 1810
அஞ்சல் குறியீடு: 2145
பரப்பளவு: 3.1 கிமீ² (1.2 சது மைல்)
உள்ளூராட்சிகள்:
மாநில மாவட்டம்:
  • செவன் ஹில்ஸ்
  • புரொஸ்பெக்ட்
  • கிரான்வில்
நடுவண் தொகுதி: பரமட்டா
Suburbs around வென்ற்வேத்வில்:
தூங்காபி பழைய தூங்காபி நோர்த்மீட்
பெண்டில் ஹில் வென்ற்வேத்வில் வெஸ்ட்மீட்
கிறேஸ்டன்ஸ் தெற்கு வென்ற்வேத்வில் மெரிலான்ட்ஸ் மேற்கு


வென்ற்வேத்வில் (Wentworthville) ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னியின் பரந்த மேற்கு சிட்னி பிராந்தியத்தில் உள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இது சிட்னி நகரிலிருந்து 27 கிலோமீட்டர் மேற்காக பரமட்டா மற்றும் கம்பர்லான்ட் உள்ளாட்சி பகுதிகளில் அமைந்துள்ளது. உள்ளூர் மக்கள் வென்ற்வேத்வில் என்ற பெயரை சுருக்கமாக 'வென்டி' என்று அழைப்பர்.

வரலாறு[தொகு]

வென்ற்வேத்வில் போர் நினைவிடம்
வென்ற்வேத்வில் பிரஸ்பைடிரியன் தேவாலயம்

வென்ற்வேத்வில், நீல மலை பிரதேசத்தில் உள்ள வென்ற்வேத் நீர்வீழ்ச்சி மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் மேற்காக இருக்கும் வென்ற்வேத் ஆகியன வென்ற்வேத் குடும்பத்தின் பெயர் காரணமாக பெயரிடப்பட்டிருக்கின்றன. பிரபல ஆஸ்திரேலிய நில ஆய்வாளர், வழக்குரைஞர், பத்திரிகை வெளியீட்டாளர், ஆரசியல்வாதி மற்றும் நில உரிமையாளரான வில்லியம் வென்ற்வேத்தின் தந்தையாகிய டி'ஆர்சி வென்ற்வேத்திற்கு 1810 ஆம் ஆண்டில் இந்த பகுதியில் உள்ள 2000 ஏக்கர் காணி நில மானியமாக வழங்கப்பட்டது.

1800 களின் நடுப்பகுதியில் ஏற்பட்ட நிலத்தேவை அதிகரிப்பை தொடர்ந்து இந்த பகுதி நிலங்கள் வீடுகள் மற்றும் பண்ணைகளுக்காக பிரிக்கப்பட்டது. வென்ற்வேத்திற்கு சொந்தமான காணிகள் 600 காணித்துண்டுகளாக பிரிக்கப்பட்டன. [1] 1864 ஆம் ஆண்டு பென்ரித் நோக்கிய ரயில்ப் பாதை இங்கு அமைக்கப்பட்டது. 1883 ஆம் ஆண்டு இங்கு அமைக்கப்பட்ட ரயில் நிலையம் முதலில் டி. ஆர். ஸ்மித் தளமேடை என்று அழைக்கப்பட்டு, பின்னர் இரண்டாண்டுகளின் பின்னர் வென்ற்வேத்வில் ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் பெற்றது.

2007 ஆம் ஆண்டில் இந்த புறநகர் பகுதியில் எல்லைகள் மீண்டும் வரையப்பட்டு வென்ற்வேத்வில்லின் வடக்குப் பகுதி கான்ஸ்டிடியூசன் ஹில் புறநகராக மாறியது.

புள்ளிவிவரங்கள்[தொகு]

2016 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வென்ற்வேத்வில்லில் வாழும் மக்களின் மூதாதையர்களில் 26% இந்தியா, 9.7% இங்கிலாந்து, 9.4% ஆஸ்திரேலியா, 7.1% சீனா, மற்றும் 3.8% லெபனான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

இங்கு வாழ்பவர்களில் 35.4% மக்கள் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள். ஏனையவர்களில் 26.5% இந்தியா, 7.8% இலங்கை, 4.4% சீனா, 2.0% பிலிப்பைன்ஸ், மற்றும் 1.7% லெபனான் ஆகிய நாடுகளில் பிறந்திருக்கிறார்கள். இவர்களில் 30.1% ஆனோர் மட்டுமே வீட்டில் ஆங்கிலம் பேசுகிறார்கள். வீடுகளில் பேசப்படும் பிற மொழிகளாக தமிழ் 11.5%, குஜராத்தி 7.9%, இந்தி 7.2%, பஞ்சாபி 4.5%, தெலுங்கு 4% ஆகியன உள்ளன.

இங்குள்ள மக்களில் 34.% ஆனோர் இந்துக்களாகவும் 18.9% ஆனோர் கத்தோலிக்கர்களாகவும் 11.6% ஆனோர் மதம் இல்லை என்றும் அடையாளப்படுத்துகின்றனர். [2]

போக்குவரத்து[தொகு]

வென்ற்வேத்வில் ரயில் நிலையம் சிட்னி ரயில் வலையமைப்பின் வடக்கு கடற்கரை, வடக்கு மற்றும் மேற்கு தடத்தில் அமைந்துள்ளது. பிளக்டவுனிலிருந்து கம்பல்டவுன் செல்லும் கம்பர்லாண்ட் ரயில் தடமும் இந்த ரயில் நிலையத்தினூடாக செல்கிறது. இங்கிருந்து சிட்னி நகருக்கான ரயில் பயண நேரம் பொதுவாக 35 நிமிடங்கள் ஆக இருக்கும்.

பள்ளிகள்[தொகு]

  • வென்ற்வேத்வில் பொது பள்ளி [3]
  • தூய கார்மேல் மலை அன்னை ஆரம்ப பள்ளி [4]
  • டார்சி சாலை பொது பள்ளி [5]
  • வெஸ்ட்மீட் கிறீஸ்தவ இலக்கண பள்ளி (முன்பு எசிங்டன் கிறீஸ்தவ கல்விச்சாலை) [6]

மேற்கோள்கள்[தொகு]