வெண்மணி மகான் நம்பூதிரிபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெண்மணி மகன் நம்புதிரிபாடு (Venmani Mahan Nambudiripad ) (1844-1893) (கடம்பன் என்றும் அழைக்கப்படுகிறார்) இவர் வெண்மணி இல்லத்தின் புகழ்பெற்ற மலையாள கவிஞரும், மலையாள இலக்கியத்தின் வெண்மணி இயக்கத்தின் முக்கிய இலக்கிய நபர்களில் ஒருவருமாவார். [1]

வெண்மணி மகான் 1844 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற வெண்மணி அச்சன் நம்பூதிரிபாடு, பொல்பயா மனையின் சிறீதேவி ஆகியோருக்கு பிறந்தார். இவர் புகழ்பெற்ற அறிஞராகவும், இருக்கு வேதத்தின் பயிற்சியாளராகவும் இருந்தார். இவர் சிறுவயதிலிருந்தே கவிதைகளை எழுதத் தொடங்கினார். ஆனால் இவரது இயல்பான சோம்பல் காரணமாக இவரின் பெரும்பாலான கவிதைகளை முடிக்க முடியவில்லை. இவர் தனது கவிதைகள் எதையும் எழுதப்பட்ட வடிவத்தில் வைத்திருக்கவில்லை. ஏனென்றால் இவர் எழுதியதை எந்த நேரத்திலும் ஓதினார்.

இவரது முக்கிய படைப்புகளில் பூரபிரபந்தம் (திருச்சூரின் பூரம் பற்றி விவரிக்கிறது), போதிபூச சரிதம், மூன்று ஆட்டகதைகள், மதுராபுரி சரிதம், கவிபுஷ்பமாலா, சங்கமேசா யாத்திரை, சங்கமேச அஷ்டகம், நான்கு துள்ளல் படைப்புகள் மற்றும் ஏராளமான பாடல்களும் பக்தி வசனங்களும் உள்ளன.

இவர் தனது 49 வயதில் பெரியம்மை நோயால் 1893 இல் இறந்தார்.

குறிப்புகள்[தொகு]