வெண்மணியாத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண்மணியாத்தூர்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் விழுப்புரம்
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

வெண்மணியாத்தூர் (ஆங்கிலம்) Venmaniyathur என்பது, தமிழ் நாட்டில், விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் வட்டத்துக்குட்பட்ட வருவாய் கிராமமும் காணை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சியும் ஆகும். இவ்வூர் மக்களின் முக்கிய தொழில் வேளாண்மை ஆகும்.

வெண்மணியாத்தூர் - இக்கிராமம் தமிழ் நாட்டின் முக்கிய நதிகளின் ஒன்றான தென்பெண்ணை நதியின் வடக்கே அமைந்துள்ளது. இக்கிராமம் தென்பெண்ணை ஆற்றுப்ப்பாசன பகுதியாதலால் எப்போதும் பசுமையாகவே காட்சியளிக்கிறது.

இங்கு நெல், கரும்பு, வாழை, தென்னை மற்றும் பணப்பயிர்களும் அதிகஅளவில் பயிரிடபடுகின்றன. நீர்வளம் நிறைந்திருப்பதால் எப்போதும் இக்கிராமம் பசுமையாகவே காட்சியாளிகிறது.

இந்த இயற்கை எழில் சூழ்ந்த அமைதியான கிராமத்தின் நடுவே எழில் கொஞ்சும் கொஞ்சுமலை மாரியம்மன் கோவில் மற்றும் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. மேலும் இக்கிராமத்திற்கு வடக்கே புகழ் பெற்ற அய்யனார் மற்றும் ஐயப்பன் ஆலயமும் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக எட்டு நாட்கள் கொண்டாடபடுகிறது.


வெண்மணியாத்தூர்க்கு அஞ்சல் விழுப்புரம் மாவட்டம், கப்பூர் அஞ்சல் நிலையம் வழி வருகின்றது. இவ்வூரின் அஞ்சல் குறியீட்டு எண் 605301. தொலைபேசி குறியீடு 04146.

இவ்வூர் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதி விழுப்புரம். இது விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிப் பிரிவில் உள்ளது.

ஊர் பெயர் காரணம்[தொகு]

இங்கு வெண்மையான முத்துபோன்ற நெல்மணிகளை விளைவிப்பதாலும் தென்பெண்ணை ஆற்றுக்கு அருகில் அமைந்திருப்பதாலும் வெண்மணியாத்தூர் என பெயர் பெற்று விளங்குகிறது

ஆதாரங்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்மணியாத்தூர்&oldid=1631427" இலிருந்து மீள்விக்கப்பட்டது