உள்ளடக்கத்துக்குச் செல்

வெண்புருவ விசிறிவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெண்புருவ விசிறிவால்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
ரைபிதுரிடே
பேரினம்:
ரைபிதுரா
இனம்:
R. aureola
இருசொற் பெயரீடு
Rhipidura aureola
லெசன், 1830

வெண்புருவ விசிறிவால் (White-browed fantail)(ரைபிதுரா ஆரியோலா) என்பது ரைபிதுரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய பாசாரின் பறவையாகும்.

விளக்கம்[தொகு]

மா மரக்கிளையில் முட்டையுடன் கூடிய வெண்புருவ விசிறிவால் கூடு - இலங்கையின் பகமுனாவில்

முதிர்ந்த வெண்புருவ விசிறிவால் குருவி சுமார் 18 செ.மீ. நீளமுடையது. இது அடர் பழுப்பு நிற மேற்பகுதிகளைக் கொண்டுள்ளது. இறக்கை வெண்புள்ளிகளுடனும் வெண்மையான அடிப்பகுதிகளுடன் இந்தப்பறவைகள் காணப்படும். விசிறி வடிவ வால் வெண்ணிற விளிம்புடன் காணப்படும். நீண்ட வெள்ளை சூப்பர்சிலியா நெற்றியில் சந்திக்கிறது. தொண்டை மற்றும் கண்மூடி கருப்பு நிறத்துடனும் விளிம்பில் வெள்ளை நிறமுடைய மீசை உள்ளது.

வாழிடம்[தொகு]

இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமண்டல பகுதிகளில் வெண்புருவ விசிறிவால் இனப்பெருக்கம் செய்கிறது. கிழக்கு பாக்கித்தானிலிருந்து தெற்கு இந்தோசீனா வரை இந்தச் சிற்றினம் காணப்படுகிறது. இது காடுகளில் காணப்படுகிறது.

நடத்தை மற்றும் சூழலியல்[தொகு]

ஒரு மரத்தில் ஒரு சிறிய கோப்பை வடிவ கூட்டில் மூன்று முட்டைகள் வரை இடும். வெண்புருவ விசிறிவால் பூச்சிகளை உண்ணக்கூடியது. மேலும் இது அடிமரங்கள் வழியாக நகரும்போது இதன் வாலை அடிக்கடி விசிறிக்கொள்கிறது.

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Rhipidura aureola". IUCN Red List of Threatened Species 2016: e.T22706796A94090600. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22706796A94090600.en. https://www.iucnredlist.org/species/22706796/94090600. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்புருவ_விசிறிவால்&oldid=3585254" இலிருந்து மீள்விக்கப்பட்டது