உள்ளடக்கத்துக்குச் செல்

வெண்பலகை இயங்குபடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண்பலகை இயங்குபட நிகழ்பட உதாரணம்
வெண்பலகை இயங்குபடம்-உதாரணம்

வெண்பலகை இயங்குபடம் (Whiteboard animation) என்பது ஒரு எழுத்தாளர் ஒரு வெண்பலகை அல்லது அதனைப் போன்ற மேற்பரப்பு உள்ளதில் குறிப்பான் எழுதுகோலைப் பயன்படுத்தி ஒரு விளக்கப்படக் கதையை வரைவதன் மூலம் பதிவு செய்யும் செயல்முறையாகும். கதையின் வரிவடிவத்தினை இயங்குபடங்கள் மூலமாக இதில் விவரிக்கப்படுகின்றன. கையால் வரையப்பட்ட விளக்கப்படங்களுக்கு உயிரூட்ட, அதன் உருவாக்குநர்கள் பொதுவாக காலக்கடப்பு ஒளிப்படவியல் மற்றும் நிறுத்த இயக்க இயங்குபடங்களைப் பயன்படுத்துகின்றனர். iதற்கு, யூடியூப்பை ஒரு பொதுவான தளமாகப் பயன்படுத்துகின்றனர். இது தொலைக்காட்சி, இணைய விளம்பரங்களிலும் நுகர்வோருடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளப் பயன்படுத்தப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆரம்பகால நிகழ்படங்கள் 2009 இல் யூடியூப்பில் வெளியிடப்பட்டன.கதை சொல்லும் சாதனமாக அறிந்துகொள்ளும் வரை சோதனை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன. இவை பெரும்பாலும் கதைகள், கல்வி விளக்கங்களில் பயன்படுத்தப்படுகிறது.

விளக்கம்

[தொகு]

"வெண்பலகை இயங்குபடம்" என்பது வெண்பலகையில் வரையப்பட்ட படங்களின் தொடரை உருவாக்கும் செயல்முறையைப் பயன்படுத்தும், ஒரு குறிப்பிட்ட வகை விளக்கக்காட்சியைக் குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட வரிசையில் பதிவு செய்யப்பட்டு பின்னர் இயங்குபட விளக்கக்காட்சியை உருவாக்க மீண்டும் மீண்டும் இயக்கப்படுகின்றன.

செயல்முறை

[தொகு]

இதன் தயாரிப்பு செயல்முறையானது ஒரு தலைப்பை உருவாக்குவதிலிருந்து தொடங்குகிறது. தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், உரை எழுதுதல் தொடங்குகிறது. உள்ளடக்கம் உருவாக்கப்பட்ட பிறகு, இயங்குபடத்தின் தோராயமான வரைவுகL உருவாக்கப்படுகிறது. இந்த செயல்முறைகள் புதிய கண்டுபிடிப்பிற்கான நேரத்தை அமைக்க உதவுகின்றன. பரவலான செயல்முறை பின்வருமாறு:

  1. உள்ளடக்கத்தை எழுதுதல்.
  2. குரல் பதிவைப் பதிவுசெய்தல்.
  3. தொடக்க இயங்குபடங்களை உருவாக்குதல்
  4. இயங்குபடங்களை ஒழுங்கமைத்தல்
  5. வழிகாட்டிகளை உருவாக்குதல்
  6. வீடியோவைப் பதிவுசெய்தல்
  7. ஒலியையும் நிகழ்படங்களையும் பொருத்துதல்
  8. இசையைச் சேர்த்தல்
  9. ஏற்றுமதி செய்து பகிர்தல். [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "How To Create A Budget Whiteboard Animation" (in en-US). UX Mastery. 2013-10-08. https://uxmastery.com/how-to-create-a-budget-whiteboard-animation/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்பலகை_இயங்குபடம்&oldid=4225454" இலிருந்து மீள்விக்கப்பட்டது