வெண்தொண்டைச் சில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வெண்தொண்டைச் சில்லை
Indian Silverbill Rajarhat KolkataOutskirts 0001.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: Estrildidae
பேரினம்: Euodice
இனம்: E. malabarica
இருசொற் பெயரீடு
Euodice malabarica
(Linnaeus, 1758)
வேறு பெயர்கள்

Lonchura malabarica

வெண்தொண்டைச் சில்லை இந்திய துணைகண்டத்தில் காணப்படும் ஒரு Passeriformes குடும்பத்தை சார்ந்த சிற்றினம் ஆகும்.

பெயர்கள்[தொகு]

தமிழில் :வெண்தொண்டைச் சில்லை

ஆங்கிலப்பெயர் : White - throated Munia Indian silverbill

அறிவியல் பெயர் :Euodice malabarica

வெண்தொண்டைச் சில்லை

[2]

உடலமைப்பு[தொகு]

10 செ.மீ. - மண்பழுப்பான உடலைக் கொண்ட இதன் வால் கூர்மையாகக் சற்றுக் கூடுதலான பழுப்பு நிறங்கொண்டது. பிட்டம் வெள்ளை நிறம், மார்பும், வயிறும் வெளிர் மஞ்சள் தோய்ந்த வெண்மை.

உணவு[தொகு]

50 வரையான குழுவாகப் புல்நிலங்கள், கள்ளி வேலிகள் ஆகியவற்றில் எறுப்பு, இரையாகக் கொள்வதோடு சோளம், நெல், புல்பூண்டின் விதைகள் ஆகியவற்றையும் உணவாக கொள்கின்றது. சிப் எனவும் சிர்ப் எனவும் குரல் கொடுக்கும்.

இனப்பெருக்கம்[தொகு]

டிசம்பர் முதல் மே முடிய புல்லால் பந்து வடிவில் சிறிய குழாய் அமைப்புடைய பக்கவாயிலோடு கூடு அமைத்து 4 முதல் 8 முட்டைகள் இடும். பறவைகளின் தூவிகளால் கூட்டை மெத்தென்று ஆக்கும். பருத்தி பயிராகும் பகுதிகளில் பஞ்சினைப் பயன்படுத்தும் கூடு தரையிலிருந்து 2 முதல் 3மீ உயரத்தில் இலந்தை, கருவேல், துரட்டி, சதுரக் கள்ளி முதலிய முள்ளோடு கூடிய புதர்களில் அமைந்திருக்கும்.

வெண்தொண்டைச் சில்லையின் கூடு

[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lonchura malabarica". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. "White - throated Munia". பார்த்த நாள் 2 அக்டோபர் 2017.
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:151
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்தொண்டைச்_சில்லை&oldid=2461347" இருந்து மீள்விக்கப்பட்டது