வெண்ணெய் புட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வெண்ணெய் புட்டு[தொகு]

வெண்ணெய் புட்டு என்பது நம் நாட்டில் பல பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று.வாலிபர் முதல் வயோதிகர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாகும்.பண்டிகை காலங்களில் மத பேதமின்றி பல வீடுகளில் செய்யப்படும் இவ்வுணவு எளிதில் செரிக்கக்கூடியது.

தேவையான பொருட்கள்

  • புழுங்கல் அரிசி -2 குவளை
  • சர்க்கரை -2 குவளை
  • நெய் -1 குவளை
  • தேங்காய்ப்பால் -1 குவளை
  • காய்ந்த திராட்சை-100 கிராம்
  • முந்திரி பருப்பு -100 கிராம்
  • ஏலக்காய் -5 எண்ணிக்கை

செய்முறை : முதலில் அரிசியை நன்றாக கழுவி,ஊறவைக்கவும்,குறைந்தது 4 மணி நேரம் ஊறவைத்து பின் நன்றாக மைப்போல் அரைக்கவும்,அரைத்ததை தண்ணீர் விட்டு கரைத்து மோர் பதத்திற்கு கரைத்து அதில் சர்க்கரை,தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு உருளியில் போட்டு மிதமான தீயில் வைத்து கிளறவும்,அடிப்பிடிக்காமல் கிளறவும்.அவ்வப்பொழுது கொஞ்சமாக நெய்யை ஊற்றவும்,முந்திரி,திராட்சையை நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும். தண்ணீர் வற்றி அல்வா பதத்திற்கு மாவு வந்ததும்,வெந்துவிட்டதை உறுதி செய்யவும்.பின்பு நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சையை கொட்டி கிளறவும்.அடுப்பை அணைத்து விட்டு ஏலக்காயை பொடித்து போடவும்.பெரிய தாம்பாளத்தில் நெய் தடவி கலவையை அதில் கொட்டி ஆறியதும் வெட்டி துண்டுகளாக்கவும்.தேவையென்றால் சிறிய கிண்ணத்தில் தேங்காய்ப்பால் ஊற்றி அதில் இத்துண்டுகளை போட்டு சாப்பிடலாம்.மறுநாள் சாப்பிட விரும்பினால்,குளிர்சாதனப்பெட்டியில் வைத்து சாப்பிடலாம்.சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

[1] [2] [3]

  1. http://www.padhuskitchen.com/2014/10/diwali-recipes-50-easy-diwali-snacks.html
  2. http://www.recipes.in/s/tamil-nadu-traditional-sweet.html
  3. https://www.youtube.com/watch?v=yI4yNCkyJYg
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்ணெய்_புட்டு&oldid=2723336" இருந்து மீள்விக்கப்பட்டது