வெண்ணெய்மலை முருகன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோயில் முகப்பு, விளக்குத்தூணுடன்

வெண்ணெய்மலை முருகன் கோவில் இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம் சேலம் நெடுஞ்சாலையில் கரூரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது .இக்கோவிலின் மூலவர் பாலசுப்ரமணியர் .

வரைபடத்தில் கோவில் சுட்டிகாட்டும் படம்

தல வரலாறு[தொகு]

சுமார் இரண்டாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்ததாக நம்பப்படும் இத்திருக்கோவிலை கருவூர் அரசர் அமைத்தார் என சொல்லப்படுகிறது .

தலபுராணம்[தொகு]

பிரம்மனால் படைக்கப்பட்ட உயிரினங்கள் பசியில்லாமல் வாழ்வதற்காக வெண்ணெயை மலையென குவித்து அதன் அருகிலேயே தேனு தீர்த்தம் என்னும் பொய்கையை உருவாக்கினார் .இதனால் தான் வெண்ணெய்மலை பாறை கடும் வெயிலிலும் குளுமையுடன் திகழ்கிறது என நம்பப்படுகிறது

தலசிறப்பு[தொகு]

மூர்த்தி , தலம் , தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் சிறப்பு பெற்ற இத்தலத்திற்கு வந்து வணங்கினால் வளமான வாழ்க்கை அமைகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. கருவூர் சித்தருக்கு தனிச் சன்னதி அமைந்துள்ளது.

கோயில் அமைப்பு[தொகு]

கோயில் வாயில்

கோயிலின் எதிரே முன்புறமாக விளக்குத் தூண் அமைந்துள்ளது. இக்கோயிலில் இடும்பன், விநாயகர், மலைக்காவலர் சன்னதிகள் உள்ளன. படிகளைக் கடந்து உள்ளே செல்லும்போது உச்சியில் விசுவநாதர், விசாலாட்சி, கருவூரார், பாலசுப்பிரமணியசுவாமி ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. பாலசுப்பிரமணியசுவாமி சன்னதிக்கு முன்பாக கொடி மரம், பலிபீடம், மயில் ஆகியவை உள்ளன. திருச்சுற்றில் கன்னி விநாயகர், பஞ்சமூர்த்தி, பைரவர் ஆகியோர் உள்ளனர். நவக்கிரகங்களின் சன்னதியும் உள்ளது.

உற்சவங்கள்[தொகு]

மாத கிருத்திகை , ஆடி கிருத்திகை , கந்த சஷ்டி , சூரசம்ஹாரம் , கார்த்திகை தீபம் , பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

நடை திறக்கும் நேரம்[தொகு]

 காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை 
 மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

பூசை காலங்கள்[தொகு]

நான்கு கால பூசைகள் நடைபெற்று வருகிறது.

 1. காலை சந்தி - 9.00 மணி
 2. உச்சி காலம் - 12.௦௦ மணி
 3. சாய ரட்சை - 6.௦௦ மணி
 4. அர்த்த சாமம் - 8.00 மணி

இலக்கியச் சிறப்பு[தொகு]

 அட்ட திசை பரவும் ஆநிலைப் பசுபதியார்
 பட்டிக் கடங்காப் பசுபடைத்தா ரம்மானை 
 பட்டிக் கடங்காப் பசுபடைத்தா ராமாயின் 
 கட்டிக் கறந்து கடைவதெவ்வா றம்மானை
 கடைந்தல்லோ வெண்ணெய்மலை 
 கண்டதுகா ணம்மானை
         - என ஒளவையார் மூவரம்மானையில் பாடியுள்ளார்

திருவிழா[தொகு]

தைப்பூச பிரமோற்சவம் பத்தாம் நாள் திருவிழாவில் திருத்தேர் திருவிழா நடைபெறுகிறது.