வெண்சோறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வெண்சோறு என்பது பிறருக்கு அளித்து உண்ணும் வெண்ணிற அரிசியால் சமைக்கப்பட்ட உணவு. இதனை இல்லத்தார் உண்ணின் அது சோறு. பிறருக்கு வழங்கின் அது "வெண்சோறு". இலக்கிய ஆட்சிகள் இதனைத் தெரிவிக்கின்றன. செல்வச் செழிப்பு மிக்க குடிமக்களும், ஏழைகளும் இதனை மற்றவர்களுக்கு வழங்குவர். கருணைக் கிழங்குக் குழம்புடன் சேர்த்து வழங்கும் வெண்சோறு பெரிதும் மதிக்கப்பட்டது. சிறூகுடி என்னும் ஊரில் வாழ்ந்த அருமன் என்னும் வள்ளல் இத்தகைய சிறந்த உணவை வழங்கியிருக்கிறான். [1]

பழங்குடி வீரப்பெருமகள் ஒருவன் தன்னிடம் இருப்பது மிகச் சிறிதே என்றாலும் வெண்சோறு வழங்கியிருக்கிறான். நாட்டைக் காக்கும் மன்னன் போருக்குப் பின்னர் வழங்குவது போல வழங்கியிருக்கிறான். [2]

மேற்கோள்[தொகு]

 1.  கருங் கண் கருணைச் செந்நெல் வெண் சோறு
  சூருடைப் பலியொடு கவரிய, குறுங் கால்
  கூழுடை நல் மனைக் குழுவின இருக்கும் 5
  மூதில் அருமன் பேர் இசைச் சிறுகுடி (நற்றிணை 362)

 2.  உள்ளது
  தவச் சிறிது ஆயினும் மிகப் பலர் என்னாள்,
  நீள் நெடும் பந்தர் ஊண் முறை ஊட்டும்
  இல் பொலி மகடூஉப் போல, சிற் சில
  வரிசையின் அளிக்கவும் வல்லன்; உரிதினின் 10
  காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்
  போகு பலி வெண் சோறு போலத்
  தூவவும் வல்லன், அவன் தூவுங்காலே. (புறநானூறு 331)

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்சோறு&oldid=2744375" இருந்து மீள்விக்கப்பட்டது