வெசுனா மிலோசெவிக் தியேலார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வெசுனா மிலோசெவிக் தியேலார்
Vesna Milosevic-Zdjelar
தேசியம்கனடா கனடியர்
பணிஅறிவியல் கல்வியாளர், வானியற்பியலாளர், நுலாசிரியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்வானியற்பியல் கனடிய இரண்டாம் பதிப்பு (நெல்சன் கல்வி, 2016)

வெசுனா மிலோசெவிக் தியேலார் (Vesna Milosevic-Zdjelar) ஒரு செர்பிய-கனடிய வானியற்பியலாளரும் அறிவியல் கல்வியாளரும் நூலாசிரியரும் ஆவார். இவர் வின்னிபெகு பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அறிவியல் சாரா மாணவருக்கு வானியற்பியல் கற்றுத் த்ருவதில் சிறப்புப் புலமை பெற்றவர்.

தொடக்கநிலை வாழ்க்கைப்பணி[தொகு]

வின்னிபெகு ஆசிரியப் பணிக்கு முன் இவர் செர்பியாவில் அமைந்த பெல்கிரேடு வான்காணகத்தில் வனியற்பியலாளராகப் பணி செய்துள்ளார். இவர் 1998 இல் நாட்டோ அமைப்பு தன் நாட்டை குண்டுவைத்து தகர்ப்பதில் இருந்து தப்பிக்க, கனடாவுக்குப் புலம்பெயர்ந்தார். கனடிய நிறுவனங்கள் இவரது வானியற்பியல் தகுதியை ஏற்றுகொண்டாலும், அறிவியல் கல்வியிலும் பட்டம் பெற முடிவெடுத்தார். இவர் முழுநேரப் பணிபெறும் முன்பு, தன் பணியை வின்னிபெகு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பயிற்றுவித்தலில் தொடங்கினர் .[1] இவரது கணவராகிய நேநாத் தியேலார் தொழில்முறை இசைக்கலைஞர் ஆவார். இவரும் கல்வியியல் இளவல் பட்ட்த்தைப் பெற்றார்.

வாழ்க்கைப்பணி[தொகு]

இவர் வானியல், அறிவியல் கருத்துப் படிமங்கள், இயற்பியல் ஆகியவற்றை வின்னிபெகு பல்கலைக்கழகத்தில் அறிவியல் சாரா மாணவருக்குப் பயிற்றுவிக்கிறார். இவர் இயற்பியல் துறையில் கல்வி கற்பிக்கிறார். அத்துறையில் 2000 இல் புல உறுப்பினராகச் சேர்ந்தார். இவர் வானியற்பியல் சிறப்புப் புலமை வாய்ந்தவர். இவரது ஆய்வு பால்வெளி வானியலிலும் அண்ட வானியற்பியலிலும் அமைகிறது. இவர் பத்துக்கும் மேற்பட்ட சமவல்லுனர் மீள்பார்வையிட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவற்ரில் ஒன்று செர்பிய வானியலாளராகிய மிலன் எம். சிர்க்கோவிக் என்பவருடன் இணைந்து எழுதியதாகும்.[1][2][3] பால்வெளிப் புறணி (புறவளிமக் கோளம்) எனும் இவரது கட்டுரை பெருமைசான்ற அரசு வானியல் கழகத்தின் மாதக் குறிப்புகள் எனும் இதழில் வெளியாகியுள்ளது.[4] கனடிய வானியல் கழகம் இவரை வானுயிரியல் புலமை வாய்ந்தவரில் ஒருவராகப் பட்டியலிட்டுள்ளது.[5]

வானியல் கல்வித் தொடரின் பகுதியாக இவர் கனடாவின் முதல் வானியல் அறிமுக நூலை இணையாசிரியராக எழுதியுள்ளார்.[6] இவர் 2017 இல் வின்னிப்எகு பல்கலைக்கழகத்தின் டெடெக்சு (TedX) கருத்தரங்கில் புடவியின் புரிதலில் நிலவும் புறநிலை வாரம்புகளைக் கடந்துசெல்லல் எனும் தலைப்பில் உரையாற்றி உள்ளார்.[7]

வின்னிபெகு பல்கலைக்கழக மதிப்பீட்டின்படி, இவர் அறிவியல் சாரா மாணவருக்கான அறிவியல் கல்வியிலும் அறிவியல் பரப்புரை வழியாக சமூக அறிவியல் உணர்வை வளர்த்ததிலும் கணிசமான பங்களிப்புகள் செய்துள்ளார். இவர் தொடர்ந்து தேசிய விருதைப் பெற்றுவரும் அறிவியல் பேசுவோம் களநிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டுவருகிறார். இது சிறுவரும் பதினட்டையரும் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் பொறியியலிலும் கணிதவியலிலும் எளிமையாக புரித்லைப் பெற வழிவகுத்து வருகிறது.[8] இவர் அருகில் அமைந்த மிகவும் ஏழ்மாஇயான பகுதிகளின் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளுக்கு எளிமையான முறையில் அறிவியல் கருத்துகளை விளக்கிவருகிறார்.[9] இவர் தன் மாணவரை அறிவியல் வகுப்புக்கு அப்பாலும் சிந்திக்கும்படி வற்புறுத்துவர் : “நீ புவியைப் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருந்து பார்த்தாலும் நிலவில் இருந்து பார்த்தாலும் புவியின் அரசியல் வரம்பெல்லைகள் ஏதும் உனக்குத் தெரியாது. கார்ல் சாகன் கூறுவது போல ஒரு நீலநிறப் பொட்டு தான தெரியும. இந்த புவி தொடர்ந்து இயங்கவேண்டுமானால், நாம் அனைவருமே படுபடவேண்டும்.”

மேற்கோள்கள்[தொகு]