உள்ளடக்கத்துக்குச் செல்

வெசுனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
A painting of a youthful goddess holding wreaths of flowers and wearing clothing imitating that of ancient Greek or Rome.
பெர்ன்ஹார்ட் ரோட்டின் 1785 ஓவியம் அலெகோரி ஆப் சிபிரிங் .

வெசுனா (Vesna) என்பது ஆரம்பக்கால சிலாவிக் புராணங்களில், குறிப்பாக குரோவாசியா,[1] செர்பியா, வடக்கு மக்கெதோனியா மற்றும் சுலோவீனியாவில் இளமை மற்றும் வசந்த காலத்துடன் தொடர்புடைய ஒரு புராணகால பெண் கதாபாத்திரம். இவரது ஆண் தோழர் வெசுனிக்குடன் இவர் வசந்த காலத்தில் கிராமப்புறங்களில் நடத்தப்படும் சடங்குகளுடன் தொடர்புடையவர் ஆவார்.[2] பத்தொன்பதாம் நூற்றாண்டில், உருசிய விவசாயிகள் மார்ச் 1 அன்று வசந்த காலம் திரும்புவதைக் கொண்டாடினர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு மையத்தில் ஒரு வானம்பாடியின் களிமண் உருவத்தைச் சுமந்துகொண்டு வயல்களுக்குச் சென்றனர். வசந்த காலத்தை வெசுனா என்று பெயரிட்டுப் பாடல்கள் பாடினர்.[3] "வெசுனா" என்பது சுலோவேனியிலும்,[2] செக் மற்றும் சுலோவேனியா மொழிகளிலும் "வசந்தம்" என்பதற்கான கவிதைச் சொல்லாகவே உள்ளது. உருசியா, போலந்து, உக்ரேனிய மற்றும் பெலாரஷ்ய மொழிகளில், வெசுனா/வியோசுனா என்பது 'வசந்தம்' என்பதற்கான சொல்லாகும். பிப்ரவரி மாதம் சில நேரங்களில் வெசுனர் என்று அழைக்கப்படுகிறது. சுலோவேனில்.[2] செர்பிய மொழியில், வெசுனிக் என்ற சொல் வசந்த காலத்தை அறிவிக்கும் அல்லது கொண்டுவரும் ஒருவரைக் குறிக்கப் பயன்படுகிறது. வெசுனா முதலில் வசந்த காலத்தில் பூமியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தெய்வமாகும். இது மோகோசின் மாற்று வடிவமாகும்.

புராணங்களில்

[தொகு]

சுலோவிக் புராணங்களில், "வெசுனாசு" என்று அழைக்கப்படும் அழகான பெண்கள் மலைகளின் மேல் உள்ள அரண்மனைகளில் வாழ்ந்தனர். இங்கு இவர்கள் பயிர்கள் மற்றும் மனித குடிமக்களின் தலைவிதியைப் பற்றி விவாதித்தனர். இவர்களின் அரண்மனைகளைச் சுற்றியுள்ள ஒரு மந்திர வட்டம் பிப்ரவரியைத் தவிர, இவர்கள் மர வண்டிகளில் கீழே பள்ளத்தாக்குக்குப் பயணிக்கும் போது மலை உச்சியை விட்டு வெளியேறுவதைத் தடுக்கிறது. இவர்கள் பாடுவதைக் குறிப்பிட்ட சிலரால் மட்டுமே கேட்க முடிந்தது. மலை அரண்மனைகளுக்குள் பதுங்கியிருப்பவர்கள் தங்கள் தலைவிதிகளை அறிந்து கொள்ளலாம். ஆனால் இவர்கள் வெசுனாசினால் பிடிபட்டால் விரும்பத்தகாத முடிவை எதிர்கொள்வார்கள்.[2]

கலாச்சாரத்தில்

[தொகு]

வெசுனா மற்றும் சூரிய இளவரசியின் கதை 1983 செக்கோசிலோவாக்கியா குறும்படம் தயாரிக்கப்பட்டது. இதனை ஜிரி பர்தா இயக்கிய பலாட் அபோட் கிரீன் வூட் (பச்சை மரம் பற்றிய கதைப்பாடல்) என்பது இந்தப் படத்தின் பெயராகும். [4] வெசுனா 2005-ல் சுலோவேனியன் தபால் தலையில் இடம்பெற்றது.[5]

மேலும் பார்க்கவும்

[தொகு]
  • வெஸ்னா (பெயர்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lost Slavic Mythology". dalje.com. Archived from the original on 2012-05-29. பார்க்கப்பட்ட நாள் Sep 8, 2020.[dead link?]
  2. 2.0 2.1 2.2 2.3 "Pošta Slovenije | Zasebno". www.posta.si. பார்க்கப்பட்ட நாள் Sep 8, 2020.
  3. Abbott (1903), p. 19
  4. Česká televize (2014). "Balada o zeleném dřevu". ceskatelevize.cz (in செக்). பார்க்கப்பட்ட நாள் 24 March 2020.
  5. Bogataj, Janez (2005). "Slovenska mitologija – Vesna" (in sl, en, de). Bilten; poštne znamke [Bulletin: Postage Stamps] (56). பன்னாட்டுத் தர தொடர் எண்:1318-6280. http://www.posta.si/downloadfile.aspx?fileid=14263. [dead link?]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெசுனா&oldid=3669927" இலிருந்து மீள்விக்கப்பட்டது