வெங்காயத்தின் புறத்தோல் செல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயற்கையாக நிறமூட்டப்பட்ட சிவப்பு வெங்காய புறத்தோலின் பெரிய செல்கள்

வெங்காயத்தின் புறத்தோல் செல்கள் (Onion epidermal cells) அதன் திசுக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வைரசுகள் மற்றும் பூஞ்சைக்கு எதிராக ஒரு பாதுகாப்பான அடுக்கை வழங்குகின்றன. இவற்றின் எளிய கட்டமைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையின் காரணமாக, தாவரங்களின் உடற்கூறியலை [1] மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவும், அல்லது பிளாசுமா பகுப்பை விளக்கவும் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள் [2]. தெளிவான புறத்தோல் செல்கள் ஒற்றை அடுக்கில் மட்டும் உள்ளன. இங்கு குளோரோபிளாசுடு இருப்பதில்லை. ஏனெனில் ஒளிச்சேர்க்கைக்காக அல்லாமல், வெங்காயத்தின் பழம்தரும் உடற்பகுதி ஆற்றல் சேமிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது [3], ஒவ்வொரு தாவர செல்லிலும் செல் சுவர், செல் சவ்வுப்படலம், சைட்டோபிளாசம், மையக்கரு, மற்றும் பெரிய செல்குமிழ் போன்றவை உள்ளன. சைட்டோபிளாசத்தின் விளிம்பில் உட்கரு காணப்படுகிறது. முக்கியமான செல்குமிழ் செல்லின் மையத்தில் சைட்டோபிளாசத்தால் சூழப்பட்டுள்ளது. சிறிய வெங்காயம் நுண்ணோக்கியால் உற்றுநோக்குவதற்கு ஒரு சிறந்த மாதிரியாகும். வெங்காயத்தை அரிவதன் மூலமும் அதன் மேல் தோலை உறிப்பதன் மூலமும் அதன் புறத்தோல் அடுக்கை நீக்க முடியும். மேம்பட்ட ஒளிர்வு நுண்ணோக்கியியல் ஆய்வுக்கெனில் வெங்காயத்தின் மையப்பகுதிக்கும் புறத்தோலுக்கும் இடைப்பட்ட அடுக்கு சிறந்ததொரு மாதிரியாகும்.

மேற்கோள்கள்[தொகு]