வெங்கடேசுவரா திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
| குறிக்கோளுரை | Vasudeva Kutumbhkam |
|---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | பன்னாட்டு சகோதரத்துவம் |
| வகை | தனியார் பல்கலைக்கழகம் |
| உருவாக்கம் | 2012 |
| துணை வேந்தர் | ஜெ. டி. எசு. பன்வார் |
| அமைவிடம் | , , 27°07′26″N 93°43′26″E / 27.124°N 93.724°E |
| இணையதளம் | www |
வெங்கடேசுவரா திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (வெ. தி. ப.)(Venkateshwara Open University) என்பது இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் நகர்லாகுனில் அமைந்துள்ள ஒரு மாநிலத் தனியார் பல்கலைக்கழகம் ஆகும். இது 2012ஆம் ஆண்டில் அருணாச்சல பிரதேச அரசாங்கத்தின் வெங்கடேசுவரா திறந்தநிலைப் பல்கலைக்கழக சட்டம் எண்.10 மூலம் வெங்கடேசுவாரா குழும நிறுவனத்தால் நிறுவப்பட்டது.[1] வெ. தி. ப. பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வெங்கடேசுவரா திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அருணாச்சலப் பிரதேச மாநில சட்டமியற்றும் சட்டம், சட்டம்/எல்இஜிஎன்--10/2012 மூலம் நிறுவப்பட்டுள்ளது.[2]
இந்த பல்கலைக்கழகம் கலை, அறிவியல், வர்த்தகம், மேலாண்மை, சட்டம், கல்வி, பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் இளநிலை, முதுநிலை, பட்டயப் படிப்புகளை வழங்குகிறது. இது முனைவர் பட்டப் படிப்புகளுக்கு வழிவகுக்கும் ஆராய்ச்சித் திட்டங்களையும் வழங்குகிறது.
பள்ளிகள்
[தொகு]இப்பல்கலைக்கழகம் 5 பள்ளிகளாகச் செயல்படுகிறது.[3]
- மேலாண்மைப் பள்ளி
- கணினி மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பள்ளி
- மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பள்ளி
- நூலகம் மற்றும் தகவல் அறிவியல் பள்ளி
- கல்விப் பள்ளி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Venkateshwara Open University Act, 2012" (PDF). Retrieved 1 September 2017.
- ↑ "About VOU is an International Platform for Higher Learning" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-01-25.
- ↑ "Venkateshwara Open University". www.vou.ac.in (in ஆங்கிலம்). Retrieved 1 March 2018. Click on "Faculty".