வெக்கை (புதினம்)
வெக்கை (புதினம்) எழுத்தாளர் பூமணி அவர்களால் எழுதப்பட்ட தமிழ்ப்புதினம் ஆகும். இந்தப் புதினம் 1982 ஆம் ஆண்டு எழுதப்பட்டது ஆகும். பூமணி 2014 ஆம் ஆண்டில் எழுதிய அஞ்ஞாடி என்ற புதினத்திற்காக சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றவர் ஆவார்[1] வெக்கை சாதிய ஆதிக்கத்தின் தாக்கத்தைப் பற்றிய ஒரு அனுபவமாக இருக்கிறது.[2].கதையில் சிதம்பரம், சானகி என்ற இரு கதாபாத்திரங்கள் மட்டுமே பெயரைத் தாங்கி வருபவை ஆகும். இதர பாத்திரங்கள் உறவு முறைகளான அண்ணன், அய்யா, ஆத்தா, மாமா, அத்தை போன்றவற்றாலேயே அடையாளப்படுத்தப்படுகின்றன.எதிரியின் கையை வெட்ட நினைத்து, தவறுதலாக மார்பின் விலாவில் குத்தி சாகடித்துவிட்டு ஓடும் 15 வயது சிறுவனாகிய செலம்பரத்தின்(சிதம்பரம்) பிம்பத்துடன் நாவல் தொடங்குகிறது. ஒருவார கால இடைவெளியில் நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்பு தனது தந்தையுடன் தலைமறைவாக எங்கெல்லாம் சென்று பதுங்கி வாழ்கிறான் என்பதுதான் கதை. இக்கதையை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பூமணியின் அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2019-10-08.
- ↑ "`லாக்கப்பைத் தொடர்ந்து வெக்கை' - வெற்றிமாறனின் அடுத்த படைப்பு!". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2019-10-08.
{{cite web}}
: External link in
(help)|website=