வூரியே மாற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வூரியே மாற்று (Fourier Transform, ஃபூரியே மாற்று) ) என்பது நேரம் சார்ந்த சமிக்ஞைகளை அலையெண் சார்ந்த சமிக்ஞைகளாக மாற்றும் முறை. கணிதத்தில், மின்னியலில், இதர பல பொறியியல் துறைகளில் வூரியே மாற்று ஒரு முக்கிய நுணுக்கம் ஆகும். பல சிக்கலான சார்புகளை மாற்றி எளிதாக ஈடாக விபரித்து கணிக்க இது உதவுகிறது.

வூரியே மாற்று மூலம் எந்த ஒரு சுழற்சி குறிப்பலையும் அல்லது எந்த ஒரு சார்புகளையும் எளிய சைன் மற்றும் கோசைன் அலைகளின் கூட்டாக விபரிக்க முடியும். வூரியே மாற்று ஒரு நேர ஆட்கள சார்பை அதிர்வெண் ஆட்கள் சார்பாக மாற்றுகிறது. இவ்வாறு மாற்றும் பொழுது நேர ஆட்களத்தில் சிரமாக இருந்த கணித செயற்பாடுகள் அதிர்வெண் ஆட்களத்தில் இலகுவாக செய்யக்கூடியதாக உள்ளது. கணிதத்திலும் பொறியியலும் இக் கணித செயற்பாடுகளை எளிமையாக செய்யவே ஒரு சார்பை அல்லது கணக்கை வூரியே மாற்றுச் செய்வர். விடை கிடைத்தவுடன் பின்னர் நேர்மாறான செயற்பாட்டின் மூலம் நேர ஆட்களத்துக்கு மாற்றுவர்.

எடுத்துக்காட்டு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வூரியே_மாற்று&oldid=2742553" இலிருந்து மீள்விக்கப்பட்டது