வீ. அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வீ. அரசு
Profvarasu.jpg
பிறப்புபெப்ரவரி 15, 1954 (1954-02-15) (அகவை 65)
வடக்கூர், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
கல்விமுதுகலை பட்டம்
பணிஎழுத்தாளர், ஆய்வாளர்
பெற்றோர்மா. வீராசாமி
சிவபாக்கியம்

பேராசிரியர் வீ. அரசு (V. Arasu) என்பவர் தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர் ஆவார்.

பிறப்பு[தொகு]

தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் வடக்கூர் என்னும் ஊரில் 15 பிப்ரவரி 1954 இல் பிறந்தவர். இவரது பெற்றோர் மா.வீராசாமி மற்றும் சிவபாக்கியம் ஆகியோர்கள் ஆவர். அவர்கள் இவருக்கு இட்ட பெயர் ராஜூ என்பதாகும். கல்விப்பின்புலம், ஆராய்ச்சி நெறிமுறைகள், ஆசிரியப் பணியில் 30 ஆண்டு அனுபவம், நவீனப்புனைவுகள், தனித்த ஆளுமைகள், அயலகத் தமிழ் இலக்கியங்கள், ஊடகங்கள் உள்ளிட்ட துறைகள், குறிப்பிடத்தக்க தனித்த ஆளுமைகளின் ஆக்கங்களை ஒட்டுமொத்தமாக கவனப்படுத்துதல் என்ற நிலைகளில் இவரது பங்களிப்பு அமைகிறது.[1][2]

கல்வி[தொகு]

பூண்டி கல்லூரியில் முதுகலையும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்ஃபில் பட்டமும் முடித்துள்ளார். 1984இல் முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ளார்.[1]

பணி[தொகு]

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.[3] க. கைலாசபதி, சிவத்தம்பி, தொ.மு.சி. ரகுநாதன், நா. வானமாமலை உள்ளிட்ட பல முன்னோடி ஆய்வாளர்களின் மரபில் தமிழாய்வில் பண்பாட்டு ஆய்வுகளுக்கு ஊக்கமளித்து வருபவர். [1]

நூல்கள்[தொகு]

கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல நூல்களையும், கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்.[கு 1]

  • வ .உ. சி. நூல் திரட்டு (புதுமைப்பித்தன் பதிப்பகம், 2002)
  • மயிலை சீனி.வேங்கடசாமி: இந்திய இலக்கியச் சிற்பிகள் (சாகித்திய அகாதெமி, 2004)[2]
  • சிறுபத்திரிக்கை அரசியல் (கங்கு வரிசை வெளியீடு, 2006)[2]
  • புதுமைப்பித்தன் கதைகள், இதழ்வழிப் பதிப்பு முழுத்திரட்டு, (அடையாளம், திருச்சி, 2011)[2]
  • தமிழியல் கல்வி குறித்த உரையாடல் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2012)
  • சங்க நூல்களின் காலம் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2012)
  • சித்தர் மரபு: நவீன சித்து விளையாட்டுகள் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2012)
  • வேலை நிறுத்தம், 1937 முதல் 1939 வரை ஜனசக்தி இதழில் வெளியான தலையங்கங்களின் தொகுப்பு (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2012)
  • திராவிட இயக்கம் 100 ஆண்டுகள் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2012)
  • இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைகள் நூறு, பதிப்பு (அடையாளம், திருச்சி, 2012)[2]
  • சங்க இலக்கியம்: பன்முக வாசிப்பு, பதிப்பு (மாற்று வெளியீட்டகம், சென்னை, 2012)[2]
  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொண்டை மண்டல சாதி - நில உறவுகள் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2013)
  • அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு, கட்டுரைத்தொகுப்பு (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2013)
  • ச.வையாபுரிப்பிள்ளையின் ஆய்வு வரலாறும் இலக்கிய வரலாறும் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2013)
  • இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு (அடையாளம் பதிப்பகம், சென்னை, 2013)
  • மயிலை. சீனி.வேங்கடசாமி நூற்களஞ்சியம்: 20 தொகுதிகள்(தமிழ் மண், சென்னை, 2013)[2]
  • விந்தன் உலகம் (விந்தன் நினைவு அறக்கட்டளை, சென்னை, 2016)
  • இது என் வாழ்நாட் பணி : பாவேந்தர் இளவரசு அவர்களின் பாவேந்தப் பயணம் (தமிழ் மண், சென்னை, 2016)
  • மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தமிழியல் ஆய்வு (சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு) (இளங்கணி பதிப்பகம், சென்னை)[4]

மேற்கோள்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. இவருடைய ஆய்வு நூல்கள், சிறு நூல்கள், ஆய்வுக்கட்டுரைத் தொகுப்புகள், ஆய்விதழ்களில் வெளியான கட்டுரைகள், ஆங்கிலக் கட்டுரைகள்,ஆய்வுப்பதிப்பு நூல்கள் பற்றிய விவரங்களை தமிழியல் ஆய்வு வெளி, வீ அரசு : ஆசிரியம்-ஆய்வு, அ.மோகனா, சந்தியா பதிப்பகம், சென்னை, 2016 என்ற நூலில் பின்னிணைப்பு பக்கம் 197 முதல் 207 வரை காணலாம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீ._அரசு&oldid=2795740" இருந்து மீள்விக்கப்பட்டது