வீலர் தீவு (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வீலர் தீவு
நாடு இந்தியா
மாநிலம் ஒடிசா
வீலர் தீவில் மேம்பட்ட வான் பாதுகாப்பு ஏவுகணை

அப்துல்கலாம் தீவு அல்லது வீலர் தீவு (Wheeler Island) இந்தியாவின் ஒடிசா மாநிலக் கடலோரம் அமைந்துள்ள ஓர் தீவாகும். மாநிலத் தலைநகரான புவனேசுவரிலிருந்து ஏறத்தாழ 150 கிமீ தொலைவில் பத்ரக் மாவட்டத்தில் சண்டிபாலி அருகே அமைந்துள்ளது. அருகிலுள்ள துறைமுகம் தமரா துறைமுகம் ஆகும். இங்கு இந்தியாவின் ஏவுகணை சோதனைத்தளம் அமைந்துள்ளது.[1]

ஒடிசாவின் சண்டிப்பூரிலிருந்து 70 கிமீ தெற்கே கடலோரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது. இரண்டு கிமீ நீளமுள்ள இதன் பரப்பளவு ஏறதாழ 390 acres (1.6 km2) உள்ளது. இங்கிருந்து இந்தியாவின் பல ஏவுகணைகள், தொலைதூர ஏவுகணைகள் உட்பட, சோதனையோட்டமாக ஏவப்படுகின்றன. எந்தவித சாலை மற்றும் வானூர்தி இணைப்பும் இல்லாத இந்தத் தீவிற்கு கப்பல்கள் மூலமே செல்ல முடியும். ஓர் சிறிய உலங்கு வானூர்தி இறங்குதளம் இருப்பினும் ஏவுகணை வான்சட்டங்கள், பிற தேவைப்பொருள்கள், கட்டிடப் பொருள்கள் மற்றும் கனரக இயந்திரங்கள் கப்பல் மூலமே எடுத்துச் செல்லக்கூடும்.

வீலர் தீவு மறைந்த இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவாக அப்துல்கலாம் தீவு என செப்டம்பர் 4, 2015 அன்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. [2][3]

பரிசோதனைகள்[தொகு]

இங்கு, அக்னி-5 ஏவுகணை(5000 km) 19-ஏப்ரல்-2012 அன்று வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூற்று: 20°45′29″N 87°05′08″E / 20.75804°N 87.085533°E / 20.75804; 87.085533

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீலர்_தீவு_(இந்தியா)&oldid=1969953" இருந்து மீள்விக்கப்பட்டது