வீர் பகதூர் சிங் கோளரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீர் பகதூர் சிங் கோளரங்கம் (Vir Bahadur Singh Planetarium, Gorakhpur)('வீர்' அல்லது 'பிர்' என்றும் உச்சரிக்கப்படுகிறது) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் உள்ள ஒரு கல்வி சார்ந்த சுற்றுலாத்தலமாகும். இது 21 திசம்பர் 2009[1] முதல் உத்தரப் பிரதேசத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குழுமத்தினால் நடத்தப்படுகிறது.

இந்த கோளரங்கில் தினமும் மதியம் 1 மணி, 3 மணி மற்றும் மாலை 5 மணி என மூன்று வேளைகளில், 45 நிமிட திரைப்பட காட்சிகளை நடத்துகிறது.[2] இது[3] மீட்டர் அளவிலான குவிமாடம் மற்றும் 395 இருக்கை திறன் கொண்டது. இது எண்ணிம தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது, மேலும் எதிர்மின் கதிர் குழாய், இவான்சு மற்றும் சுதிர்லாண்டின் உபகரணங்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-12-07. பார்க்கப்பட்ட நாள் 2022-05-02.
  2. "अब तारामंडल का टिकट भी आनलाइन". Dainik Jagran. 25 May 2018.
  3. "Planetariums in India". Go Astronomy. பார்க்கப்பட்ட நாள் 28 February 2020.

மேலும் பார்க்கவும்[தொகு]

  • கோளரங்கங்களின் பட்டியல்