வீர் தேஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீர் தேஜா
தேஜாஜி குதிரையில் செல்லுதல்
அதிபதிஇந்து
வகைதேவன், சிவன் அவதாரம்

வீர் தேஜாஜி அல்லது தேஜாஜி ஒரு இராஜஸ்தானிய நாட்டுப்புற வழிபாட்டு தெய்வம் ஆவார். இவர் இராசத்தானின் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் சிவனின் 11 அவதாரங்களில் ஒருவராக வழிபடப்படுகிறார்.[1][2]

பிறப்பு[தொகு]

வீர் தேஜா இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கர்னால் என்னும் ஊரில் 1074 ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர் ஜாட் இனத்தைச் சேர்ந்த ராம்குன்வாரி மற்றும் தாஹர் ஆவர்.[3][4][5]

இறப்பு[தொகு]

வீர் தேஜா 1103ம் ஆண்டு மரணம் அடைந்ததாக புராணக்கதை ஒன்று கூறுகிறது. அக்கதையின் படி, தேஜா பாம்பு ஒன்றை தன் நாக்கில் தீண்ட அனுமதி அளித்தாகவும் அந்த விஷத்தால் அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. பதிலுக்கு அந்த பாம்பு, தேஜாவின் ஆசியைப் பெற்றவர்களுக்கு எந்த பாம்பின் அல்லது விலங்கின் விஷத்தாலும் மரணம் ஏற்படாது என்று வரம் அளித்ததாக நம்பப்படுகிறது.[5]

நம்பிக்கை[தொகு]

இராஜஸ்தானிய மக்களால் பத்ரபாத மாதத்தின் பத்தாவது சுக்ல தினத்தில் பாம்பினால் அளிக்கப்பட்ட வரமும் தேஜாஜியின் மரணமும் நினைவு கூரப்படுகிறது.[5] மானுடவியலாளர்கள் தேஜாஜி குறித்து கூறும் போது ஜாதிய முறைக்கு எதிரான கூறுகளை உள்ளடக்கிய கதாநாயகன் என்கின்றனர்.[6]

கோவில்கள்[தொகு]

கௌரவம்[தொகு]

2011-ஆம் ஆண்டு செப்டம்பரில் இவர் நினைவைப் போற்றும் விதமாக இந்திய அரசு தேஜாஜியின் படத்துடன் கூடிய அஞ்சல் தலையை வெளியிட்டது.[7]

1980-ஆம் ஆண்டு தேஜாஜியின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு வீர் தேஜாஜி என்னும் ராஜஸ்தான் மொழி திரைப்படம் வெளிவந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Reuters Editorial. "In India, getting bitten by a snake seen as good luck" (in en-US). U.S.. https://www.reuters.com/article/us-india-snake-festival-idUSKCN11L2C4. 
  2. ANI (16 September 2016). "Rajasthan celebrates unique snake festival to bring good fortune" (in en). India.com. https://www.india.com/news/india/rajasthan-celebrates-unique-snake-festival-to-bring-good-fortune-1491059/. 
  3. Jain, Pratibha; Śarmā, Saṅgītā (2004). Honour, Status & Polity. Rawat Publications. பக். 336. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8-170-33859-8. https://books.google.com/books?id=dufZAAAAMAAJ&q=tejaji+RAJPUT. பார்த்த நாள்: 1 July 2021. 
  4. Aryan, Subhashini (1994). Folk Bronzes of Rajasthan. Lalit Kala Akademi. பக். 80. https://books.google.com/books?id=joLWAAAAMAAJ&q=tejaji+RAJPUT. பார்த்த நாள்: 1 July 2021. 
  5. 5.0 5.1 5.2 Hooja, Rima (2006). A History of Rajasthan. Rupa Publications. பக். 428. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8129108906. https://books.google.com/books?id=tosMAQAAMAAJ&pg=PA428. பார்த்த நாள்: 2019-02-16. 
  6. Dhali, Rajshree Popular Religion in Rajasthan: A Study of Four Deities and Their Worship in Nineteenth and Twentieth Century, 2014, p. 229
  7. Rajasthan Voice: Thursday, September 8, 2011, Special postage stamp released on Folk deity Veer Teja
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீர்_தேஜா&oldid=3649369" இலிருந்து மீள்விக்கப்பட்டது