உள்ளடக்கத்துக்குச் செல்

வீர் குன்வர் சிங் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Veer Kunwar Singh University
குறிக்கோளுரைविद्या धर्मेण शोभते
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Knowledge Shines with Righteousness
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்22 அக்டோபர் 1992 (33 ஆண்டுகள் முன்னர்) (1992-10-22)
வேந்தர்பீகார் ஆளுநர்களின் பட்டியல்
துணை வேந்தர்Shailendra Kumar Chaturvedi
அமைவிடம்,
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு, இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம்
இணையதளம்www.vksu.ac.in

வீர் குன்வர் சிங் பல்கலைக்கழகம் (Veer Kunwar Singh University) 1992 அக்டோபர் 22 அன்று பீகாரில் அர்ராவை தலைமையிடமாகக் கொண்டு, பீகார் பல்கலைக்கழகச் சட்டம் 1976 இன் கீழ் (1992ஆம் ஆண்டின் திருத்தச் சட்டம் 9 ஆக) நிறுவப்பட்ட அரசுப் பல்கலைக்கழகம் ஆகும். இது நன்கு அறியப்பட்ட தேசிய வீரரும் 1857ஆம் ஆண்டின் புகழ்பெற்ற இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான குன்வர் சிங் நினைவாகப் பெயரிடப்பட்டது.

இது பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தின் பிரிவு 2(f) இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பட்டியலில் உள்ளது. பீகாரில் உள்ள கயாவில் உள்ள முந்தைய மகத் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்ட கல்லூரிகளில் சிலவற்றை இப்பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.. இக்கல்லூரிகள் அனைத்தும் பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதி உதவியைப் பெறுகின்றன.

கல்வி

[தொகு]

வீர் குன்வர் சிங் பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிதம், கணினி அறிவியல், வணிகம், வரலாறு, பொருளாதாரம், மேலாண்மை, சட்டம், சமூகவியல், புவியியல் போன்ற துறைகளில் கற்பித்தலும் ஆய்வு படிப்புகளும் நடைபெறுகிறது. மாநிலம் மற்றும் இதைச் சுற்றியுள்ள கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து பரிமாற்றத் திட்டங்களையும் இது நடத்துகிறது.

கல்லூரிகள்

[தொகு]

வீர் குன்வர் சிங் பல்கலைக்கழக அதிகார வரம்பு போஜ்பூர், பக்சர், கைமூர் மற்றும் ரோஹ்தாஸ் ஆகிய நான்கு மாவட்டங்களில் பரவியுள்ளது.[1]

இணைப்பு கல்லூரிகள்

[தொகு]
  • சுமித்ரா மகிளா கல்லூரி தும்ரான்
  • கே. கே. மண்டல் கல்லூரி பக்சர்
  • பிசி கல்லூரி பக்சர்
  • தி எசு ஐ எம் கல்லூரி, அரா, போஜ்பூர்
  • ஜன் சகாரி கல்லூரி (பாரப்), கர்கானி போஜ்பூர்
  • தி. கே கல்லூரி தும்ராவ், பக்சர் ஜிலா
  • பக்சர் எம். வி கல்லூரி
  • தி. கே. எம் கல்லூரி டுமாரி

உறுப்புக் கல்லூரிகள்

[தொகு]

வீர் குன்வர் சிங் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள் [2]

  • கர்பிரசாத் தாசு ஜெயின் கல்லூரி, அர்ரா
  • மகாராஜா கல்லூரி, அர்ரா
  • எஸ்பி கல்லூரி, ஆரா
  • ஜக்ஜீவன் கல்லூரி, அர்ரா
  • எம். எம். மகிளா கல்லூரி, அர்ரா
  • எம். வி கல்லூரி, பக்சர்
  • தி. கே. கல்லூரி, டும்ரான்
  • செசா கல்லூரி, சசாரம்
  • எசு. பி. ஜெயின் கல்லூரி, சசாரம்
  • ரோக்தாசு மகிளா கல்லூரி, சசரம்
  • ஸ்ரீ சங்கர் கல்லூரி, சசாரம்
  • ஏ. எசு. கல்லூரி, பிக்ரம்கஞ்ச்
  • ஜே. எல். என். கல்லூரி, டெஹ்ரி-ஆன்-சோன்
  • எசு. என் கல்லூரி, ஷாமல் கைராடியோ
  • மகளிர் கல்லூரி, தால்மியாநகர்
  • எசு. வி. பி. கல்லூரி, பபுவா
  • கிராம் பாரதி கல்லூரி, ராம்கர்

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

[தொகு]
  • பவன் சிங் (போஜ்புரி பாடகர் மற்றும் நடிகர்)
  • அலோக் குமார் (தலைமை நிர்வாக அதிகாரி - தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் சர்வதேச லிமிடெட்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Affiliated College under V.K.S.U". vksu.ac.in.
  2. "Official Website of Constituent Colleges". Archived from the original on 2020-12-04.