உள்ளடக்கத்துக்குச் செல்

வீர்தாமோத்

ஆள்கூறுகள்: 26°38′N 87°59′E / 26.633°N 87.983°E / 26.633; 87.983
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீர்தாமோத்
बिर्तामोड
முக்தி சதுக்கம், வீர்தாமோத் நகரம்
முக்தி சதுக்கம், வீர்தாமோத் நகரம்
வீர்தாமோத் is located in Province No. 1
வீர்தாமோத்
வீர்தாமோத்
நேபாளத்தின் கோசி மாநிலத்தில் வீர்தாமோத் நகரத்தின் அமைவிடம் subdivision_type = நாடு
வீர்தாமோத் is located in நேபாளம்
வீர்தாமோத்
வீர்தாமோத்
வீர்தாமோத் (நேபாளம்)
ஆள்கூறுகள்: 26°38′N 87°59′E / 26.633°N 87.983°E / 26.633; 87.983
மாநிலம்கோசி மாநிலம்
மாவட்டம்ஜாப்பா மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்78.24 km2 (30.21 sq mi)
ஏற்றம்
300 m (1,000 ft)
மக்கள்தொகை
 (2021)
 • மொத்தம்1,16,192
 • அடர்த்தி1,500/km2 (3,800/sq mi)
நேர வலயம்ஒசநே+05:45 (நேபாள சீர் நேரம்)
அஞ்சல் குறியீடு
57204
தொலைபேசி குறியீடு023
இணையதளம்www.birtamodmun.gov.np
முக்தி சதுக்கம், வீர்தாமோத் நகரம், ஜாப்பா மாவட்டம், நேபாளம்

வீர்தாமோத் (Birtamod) (நேபாள மொழி:बिर्तामोड), நேபாளம் நாடு, கோசி மாநிலம், ஜாப்பா மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி ஆகும். இது மாவட்டத் தலைமையிடமான பத்திரப்பூர் நகரத்திற்கு வடமேற்கே 16.7 கிலோமீட்டர் தொலைவிலும்: மாநிலத் தலைநகரான விராட்நகருக்கு வடகிழக்கே 94.3 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. நேபாளத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் மகேந்திரா நெடுஞ்சாலை வீர்தாமோத் நகரம் வழியாகச் செல்கிறது. இந்நகரத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் மோச்சிக்கு அருகில் உள்ள சந்திரகதி வானூர்தி நிலையம் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2021ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 78.24 km² பரப்பளவு கொண்ட வீர்தாமோத் நகராட்சியின் மக்கள் தொகை 1,16,192 ஆகும். அதில் 56,105 (48.3%) ஆண்கள் மற்றும் 60,087 (51.7%) பெண்கள் உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 3.3% ஆக உயர்ந்துள்ளது.[1]

சமயம்

[தொகு]

இதன் மக்கள் தொகையில் இந்து சமயததினர் 83%, மலைவாழ் மக்கள் 6%, பௌத்தர்கள் 4% இசுலாமியர் 4% மற்றும் பிறர் 3% ஆக உள்ளனர்.[2]

ஜாதி & இனக்குழுக்கள்

[தொகு]

மலை பிராமணர்கள் 28%, செத்திரிகள் 13%, ராஜ்வம்ச மக்கள் 10%, லிம்பு மக்கள் 6.5%, ராய் மக்கள் 3.9%, முஸ்லீம்கள் 4% மற்றும் பிறர் 35% உள்ளனர்.[3]

மொழிகள்

[தொகு]

ராஜ்வம்சி மொழி 10%, மைதிலி மொழி 6%, லிம்பு மொழி 4% மற்றும் பிற மொழிகளை 22% மக்கள் பேசுகின்றனர்.[4]

தட்ப வெப்பம்

[தொகு]

இதன் கோடக்கால அதிகபட்ச வெப்பம் 38 டிகிரி செல்சியசும், குளிர்கால வெப்பம் 2 டிகிரி செல்சியசுமாக உள்ளது. மழைக்காலம் சூன் முதல் செப்டம்பர் வரையாகும்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Birtamod Municipality in Nepal Population Census 2021
  2. "NepalMap profile: Birtamod Municipality". NepalMap. Retrieved 1 August 2022.
  3. "NepalMap profile: Birtamod Municipality". NepalMap. Retrieved 1 August 2022.
  4. "NepalMap profile: Birtamod Municipality". NepalMap. Retrieved 1 August 2022.
  5. "Climate Division (Climate Analysis Section)". Department of Hydrology and Meteorology. Retrieved 8 February 2025.
  6. "ネパール国 全国貯水式水力発電所マスタープラン調査 ファイナルレポート" (PDF). Japan International Cooperation Agency. Archived from the original (PDF) on 6 April 2024. Retrieved 21 February 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீர்தாமோத்&oldid=4466730" இலிருந்து மீள்விக்கப்பட்டது