வீரு கோலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வீரு கோலி (Veeru Kohli) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு கொத்தடிமைத் தொழிலாளர் ஆவார். 1964 ஆம் ஆண்டில் பிறந்த இவர் மனித உரிமை ஆர்வலரலாக வாழ்ந்தார். [1] அடிமைத்தனத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யத் தொடங்கிய இவர் இருபது வருடங்கள் தானே அடிமைத்தனத்தில் சிக்கி கொத்தடிமையாக வாழ்ந்த பிறகுதான் அறியப்பட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

வீரு கோலி பாக்கித்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள மிர்ப்பூர் காசு மாவட்டம் யூத்தோ நகரத்தின் அல்லாதினோ சா கிராமத்தில் ஒரு ஏழை இந்து அட்டவணை சாதி விவசாய தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்தார். 16 வயதில் தங்கள் வீட்டு உரிமையாளருடன் ஒரு குடும்பத்தில் திருமணம் செய்துகொண்டார். [2] [3] தற்போது விதவையாக வாழும் வீருவுக்கு இப்போது 11 குழந்தைகள் இருக்கிறார்கள். [2] இவரது பெயர் சில நேரங்களில் வீரோ கோலி என்று எழுதப்படுகிறது.

பிரச்சாரம்[தொகு]

2013 ஆம் ஆண்டு ஐதராபாத்து மாகாணத் தேர்தலில் வீரு சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். [4] [5]

முன்னதாக வீரு தெற்கு பாக்கித்தானில் ஓர் அடிமையாக இருந்தார். ஆனால் இவரைக் கைப்பற்றியவர்களிடமிருந்து தப்பித்தார். [6]

அடிமைத்தனத்திற்கு ஆளாகி அடித்து துன்புறுத்தப்பட்ட இன்னல்களுக்குப் பிறகு, வீரு அதிகாரிகளிடம் நின்று போராடி சுதந்திரம் பெற்றார், [3] ஐதராபாத்தில் உள்ள பாக்கித்தான் மனித உரிமைகள் ஆணையத்தின் உதவி இவருக்குக் கிடைத்தது. [2] இவருடைய அனுபவங்கள் மற்றவர்களின் சுதந்திரத்திற்காகப் பிரச்சாரம் செய்ய இவரை ஊக்கப்படுத்தின. தெற்கு பஞ்சாப் பகுதியின் மக்களால் பேசப்படும் இந்திய ஆரிய மொழிகளில் ஒன்றான பஞ்சாபி மொழியின் வட்டார வழக்கு மொழியான சராய்கி மொழி பேச்சாளரான இவர் பரந்த அளவிலான மக்களுடன் தொடர்பு கொள்ள உதவுவதற்காக உருது கற்றுக்கொள்ள வேண்டியதாக இருந்தது. இலாப நோக்கமற்ற ஆக்சுபாம் அமைப்பு இவருடைய சிந்தனைகளை ஊக்குவிக்கவும் இவருடைய நம்பிக்கையை வளர்க்கவும் உதவியது. [3]

2009 ஆம் ஆண்டு பிரீ தி சிலேவ்சு என்ற அடிமைகளை விடுவியுங்கள் அமைப்பால் பிரடெரிக் டக்ளசு பிரீடம் விருது வீருவுக்கு வழங்கப்பட்டது. [2] [7]

பாக்கித்தானைச் சேர்ந்த 125 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பெண் ஆர்வலர்கள் 2012 ஆம் ஆண்டு லாகூரில் கூடி, மகளிர் வள மையத்தின் மகளிர் அதிகாரமளித்தல் மற்றும் சனநாயகத்திற்கான தலைமைத்துவ மேம்பாட்டு திட்டத்தின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டனர். வீரு கோலியும் இம்மாநாட்டில் கலந்து கொண்டார்.

பாக்கித்தானில் பெண்ணியத் தலைமையின் தேவையைச் சுற்றி மாநாட்டு விவாதங்கள் சுழன்றன.  பெண்கள் உரிமை மற்றும் சமூக நீதி இயக்கத்தை நிலைநிறுத்தவும்   அனைத்து பாக்கித்தான் பெண்களையும் அவர்களின் மதம், சாதி,  மற்றும் சமூக நிலையைப்  பொருட்படுத்தாமல் முன்னேற்றப்  பாதையில் கொண்டு செல்ல உதவும் உத்திகள்  மற்றும் கடினமான சவால்களும் இங்கு விவாதிக்கப்பட்டன.

ஆசாத் நகர்[தொகு]

ஆசாத் நகர் என்பது வீரு கோலி 2006 ஆம் ஆண்டு உள்ளூர் இலாப நோக்கமற்ற நிறுவனமான பசுமை ஊரக வளர்ச்சி அமைப்பு மற்றும் கிடைத்த அதிரடி உதவி ஆகியவற்றின் உதவியுடன் கட்டிய ஒரு குடியேற்றப் பகுதியாகும். விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்கள் தங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்கும்போது தற்காலிகமாக வாழும் இடமாக ஆசாத் நகர் திட்டமிடப்பட்டது. 4.5 எக்டேர் நிலத்தில் 310 குடும்பங்கள் இங்கு உள்ளன. பெரும்பாலான குடியிருப்பாளர்கள் இந்துக்களாக உள்ளார்கள். [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Women activists stress need for transformative feminist leadership". The Nation (November 21, 2015).
  2. 2.0 2.1 2.2 2.3 "Veeru Kohli: From bonded labourer to election hopeful", Dawn.com, 24 April 2014.
  3. 3.0 3.1 3.2 A brick-solid activist, Express Tribune, 13 Dec 2015
  4. Repila, Jacky (4 July 2013). "Veeru Kohli – the ultimate outsider". Oxfam.
  5. Green, Duncan (23 July 2013). "Women's Leadership Groups in Pakistan – Some Good News and Inspiration". World Bank.
  6. Mehmood, Rabia (21 September 2014). "Home of the Free: Starting a New Life in Pakistan's Azad Nagar, A Colony of Ex-Slaves". Aljazeera America.
  7. Free the Slaves
  8. https://www.aljazeera.com/indepth/features/2017/03/veeru-kohli-bonded-labourer-bhuttos-170306130532794.html

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரு_கோலி&oldid=3278815" இருந்து மீள்விக்கப்பட்டது