வீரிய ஒட்டு ரகம் தயாரித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முன்னுரை: பருத்தியில் வீரிய ஒட்டுரக விதை உற்பத்தியில் பெண் பூவிலுள்ள ஆண்பாகத்தினை நீக்கும் முறையையும், ஆன் பூக்களைக்கொண்டு மகரந்த சேர்க்கை (ஒட்டு சேர்த்தால் ) செய்யும் முறையையும் செய்தல்பெண் மலர் பூப்பதற்கு ஒரு நாள் முன்பு பூ மொட்டுக்கள் உள்ள அல்லி வட்டம் ,புல்லிவட்டம் மற்றும் மகரந்தப்பை ஆகியவற்றை சூல்தண்டு மற்றும் சூல்முடிக்கு சேதம் ஏற்படாதவாறு மாலை வேளைகளில் நீக்க வேண்டும் . பின்னர் இதனை சிவப்பு நிற காகிதப்பை கொண்டு மூடி அயல் மகரந்தசேர்க்கை ஏற்படுவதை தவிர்க்கவும் .. அடுத்தநாள் காலை 9 மணி முதல் 12 மணி வரை ஆண் மலரில் உள்ள மகரந்தத்தூளை பெண் மலரின் சூல்முடியில் படுமாறு தடவி வெள்ளை நிற காகிதப்பைகளை கொண்டு மூட வேண்டும் ஒரு ஆண் பூவிலுள்ள மகரந்தம் ஐந்து பெண் பூக்களில் மகரந்த சேர்க்கை செய்யப்போதுமானது . பெண் பூக்களில் மகரந்தம் தடவாமல் விட்டுப்போயிருந்தாலோ , ஆண் பாகம் நீக்கப்படாமல் இருந்தாலோஅவற்றை அவ்வப்போது அகற்றி அறுவடையின் பொது ஏற்படும் இனக்கலப்பை தவிர்க்கலாம் .