வீரவல்லி எஸ். வரதராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீரவல்லி எஸ். வரதராஜன்

பிறப்பு (1937-05-18)18 மே 1937
பெங்களூரு, இந்தியா[1]
இறப்பு25 ஏப்ரல் 2019(2019-04-25) (அகவை 81)
சாந்தா மொனிக்கா கலிபோர்னியா, ஐக்கிய நாடுகள்
தேசியம்இந்தியர்
துறைகணிதம்
Alma materமாநிலக் கல்லூரி, சென்னை
இந்தியப் புள்ளியியல் கழகம், கொல்கத்தா
துறை ஆலோசகர்சி. ஆர். ராவ்
அறியப்பட்டதுதுரோம்பை-வரதராஜன் தேற்றம்
பரிசுகள்ஆன்சாகர் பதக்கம்

வீரவல்லி சே. வரதராஜன் (Veeravalli S. Varadarajan, மே 18, 1937 - 25 ஏப்ரல் 2019) என்பவா் UCLA இல் உள்ள இந்திய கணிதவியலாளராகும். இவர் பல கணிதத் துறைகளில், குறிப்பாக, லீ குழுக்கள் மற்றும் அவற்றின் பிரதிநிதித்துவம், குவாண்டம் மெக்கானிக்ஸ், வகைக்கெழு சமன்பாடுகள் மற்றும் supersymmetry ஆகியவற்றில் பங்காற்றியுள்ளாா்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

வரதராஜன் தனது பட்டப் படிப்பை 1957ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் முடித்தாா். தனது ஆராய்ச்சிப் படிப்பை கல்கத்தாவில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் சி. ஆர். ராவ் மேற்பார்வையில் முடித்தாா். இங்கே இவர் "புகழ்பெற்ற நான்கு" மாணவா்களுள் ஒருவராகத் திகழ்ந்தாா்.[2] (மற்றவர்கள் ஆர். ரங்கா ராவ், கே. ஆர். பார்த்தசாரதி மற்றும் எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்). சிறிது காலம் இன்ஸ்டிடியூட் ஃபார் அண்டர்ஸ்டன் ஸ்டடி மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பணியாற்றிய பின் 1965இல் யு.சி.எல்.ஏ. இல் கணிதவியல் துறையில் சேர்ந்தார்.

பங்களிப்புகள்[தொகு]

வரதராஜனின் ஆரம்பகால பணி, அவரது முனைவர் பட்ட ஆய்வு உட்பட, அனைத்தும் நிகழ்தகவு கோட்பாடு என்ற கணிதத் துறையில் இருந்தது. பின்னர் அவர் தனது சிறந்த படைப்பாக அறியப்பட்ட பிரதிநிதித்துவ கோட்பாட்டில் ஆய்வு செய்ய ஆரம்பித்தாா். 1980 களில், அவர் ஒழுங்கற்ற ஒற்றுமைகளைக் கொண்ட வகைக்கெழு சமன்பாடுகளில் டொனால்ட் பாபிட்டுடன் இணைந்து தொடர்ச்சியான சில கட்டுரைகளை எழுதினார். அவரது சமீபத்திய பணி, மீச்சமச்சீர்மை (supersymmetry) என்ற தலைப்பில் உள்ளது.

1967 ஆம் ஆண்டில் பெட்ராம் கோஸ்டன்ட், கே. ஆர். பார்த்தசாரதி மற்றும் ஆர். ரங்கா ராவ் ஆகியோருடன் இணைந்து கோஸ்டன்ட்-பார்த்தசாரதி-ரங்கா ராவ்-வரதராஜன் அணிக்கோவைகள் மற்றும் டிராம்பி-வரதராஜன் தேற்றம் ஆகியவற்றை 1972 இல் அறிமுகப்படுத்தினார், [3] மேலும் 1975 இல் என்ரைத்-வரதராஜன் தொகுதிகளை[4] அறிமுகப்படுத்தினார்.

அங்கீகாரம்[தொகு]

1998 இல் அவரது பணிக்கு அவர் ஆன்சாகா் பதக்கம் பெற்றார். நவம்பர் 1, 2012 இல் அமெரிக்க கணிதவியல் சங்கத்தின் பயிற்றுவிப்பாளர்களால் உருவாக்கிய, விரிவாக்க முன்னேற்றம், தொடர்பு மற்றும் கணிதத்தை பயன்படுத்துதல் ஆகியவற்றுக்காக 23 இந்திய மற்றும் இந்திய அமெரிக்க உறுப்பினர்களுடன் சேர்ந்து அவர் அங்கீகரிக்கப்பட்டார்.[5]

நூற்பட்டியல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Reflections on a Long Innings – Bhāvanā" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-30.
  2. Kalyan Bidhan Sinha மற்றும் பி. வி. ராஜாராம பட். "Veeravalli S. Varadarajan" (PDF). லூசியானா மாநிலப் பல்கலைக்கழகம்].
  3. Trombi, P. C.; Varadarajan, V. S. (1972). "Asymptotic behaviour of eigen functions on a semisimple Lie group: The discrete spectrum". Acta Mathematica 129 (1): 237–280. 
  4. Enright, Thomas J.; Varadarajan, V. S. (1975). "On an infinitesimal characterization of the discrete series". The Annals of Mathematics 102 (1): 1–15. https://archive.org/details/sim_annals-of-mathematics_1975-07_102_1/page/1. 
  5. "American Mathematical Society Honors 23 Indians". Nov 1, 2012. India-West. Archived from the original on December 23, 2012. பார்க்கப்பட்ட நாள் Dec 19, 2012.
  6. Anthony W. Knapp (1975). "Review: Lie groups, Lie algebras, and their representations, by V. S. Varadarajan; and Compact Lie groups and their representations, by D. P. Želobenko". Bull. Amer. Math. Soc. (N.S.) 81 (5): 865–872. doi:10.1090/s0002-9904-1975-13866-3. http://www.ams.org/journals/bull/1975-81-05/S0002-9904-1975-13866-3/S0002-9904-1975-13866-3.pdf. 
  7. Rebecca A. Herb (1979). "Review: Harmonic analysis on real reductive groups, by V. S. Varadarajan". Bull. Amer. Math. Soc. (N.S.) 1 (2): 398–401. doi:10.1090/s0273-0979-1979-14614-7. http://www.ams.org/journals/bull/1979-01-02/S0273-0979-1979-14614-7/S0273-0979-1979-14614-7.pdf. 
  8. Barbasch, D. (1990). "Review: Harmonic analysis of spherical functions on real reductive groups, by R. Gangolli and V. S. Varadarajan". Bull. Amer. Math. Soc. (N.S.) 23 (2): 598–604. doi:10.1090/s0273-0979-1990-15996-8. http://www.ams.org/journals/bull/1990-23-02/S0273-0979-1990-15996-8/S0273-0979-1990-15996-8.pdf. 
  9. Joseph A. Wolf (1993). "Review: An introduction to harmonic analysis on semisimple Lie groups, by V. S. Varadarjan". Bull. Amer. Math. Soc. (N.S.) 28 (2): 367–370. doi:10.1090/s0273-0979-1993-00365-3. http://www.ams.org/journals/bull/1993-28-02/S0273-0979-1993-00365-3/S0273-0979-1993-00365-3.pdf. 
  10. Roy, Ranjan (2008-01-01). "Review of Euler Through Time: A New Look at Old Themes". The American Mathematical Monthly 115 (5): 469–473. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரவல்லி_எஸ்._வரதராஜன்&oldid=3796688" இலிருந்து மீள்விக்கப்பட்டது