வீரவர்மன் (சந்தேல வம்சம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீரவர்மன்
பரம-பட்டாரக மகாராஜாதிராஜா பரமேசுவரன், கலிஞ்சராதிபதி
புந்தேல்கண்ட்டின் மன்னன்
ஆட்சிக்காலம்சுமார் பொ.ச. 1245-1285
முன்னையவர்திரைலோக்கியவர்மன்
பின்னையவர்போஜவர்மன்
அரசமரபுசந்தேலர்கள்
தந்தைஇரண்டாம் யசோவர்மன்

வீரவர்மன் (Viravarman) (ஆட்சிக் காலம்; பொ.ச. 1245-1285 ) 12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவின் மத்தியப் பகுதியை ஆண்ட சந்தேல வம்சத்தின் அரசனாவார். செகசபுக்தி பிராந்தியத்தின் (இன்றைய மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள புந்தேல்கண்ட்) ஆட்சியாளராக இருந்தார்.

வரலாறு[தொகு]

திரைலோக்கியவர்மனுக்குப் பிறகு வீரவர்மன் சந்தேல மன்னனானார். இவர் வழக்கமான சந்தேல ஏகாதிபத்திய பட்டங்களான "பரம-பட்டாரக மகாராஜாதிராஜா பரமேசுவர கலஞ்சராதிபதி" என்ற பட்டத்தை கொண்டிருந்தார். [1] தனது முன்னோடிகளைப் போலவே, வீரவர்மனும் செப்புக் காசுகளையும் தங்கக் காசுகளையும் வெளியிட்டார். [2]

விக்ரம் நாட்காட்டி 1311 தேதியிட்ட சர்க்காரி கல்வெட்டின் படி, வீரவர்மனின் தளபதி ரௌத அபி, சந்திரேசுவர்-அன்வயவின் தப்யுஹதா-வர்மனை சோந்தியில் (நவீன சியோந்தா) தோற்கடித்ததாகக் கூறுகிறாது. [3] வீரவர்மன் யஜ்வபால மன்னன் கோபாலனின் தலைநகரான நளபுரத்தின் (நவீன நார்வார்) மீதும் படையெடுத்தான். [4] சந்தேலர்களின் தாஹி செப்புத் தகடு, சந்தேல தளபதி மல்லையா நளபுரத்தின் தலைவனை தோற்கடித்ததாகக் கூறுகிறது. [5] மறுபுறம், யஜ்வபாலர்களின் பங்களா மற்றும் நார்வார் கல்வெட்டுகள் கோபாலன் வீரவர்மனைத் தோற்கடித்ததாகக் கூறுகின்றன. [6] வீரவர்மன் சில ஆரம்ப வெற்றிகளைப் பெற்றிருக்கலாம், ஆனால் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. [4]

பெரிஷ்தா போன்ற முஸ்லிம் வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, தில்லி சுல்தான் நசிருதீன் மஹ்மூத் பொ.ச.125-இல் புந்தேல்கண்ட் பகுதியைக் கைப்பற்றினார். இருப்பினும், அவரால் சந்தேலர்களை ஒழிக்க முடியவில்லை. இந்தக் காலகட்டத்திற்குப் பின் தேதியிட்ட சந்தேலக் கல்வெட்டுகள் மூலம் இது தெளிவாகிறது. வீரவர்மனின் ராணி கல்யாணதேவியின் பொ.ச.1260 கல்வெட்டு அவர் நந்திபுரத்தில் ஒரு கிணற்றையும், ஒரு ஏரியையும் கட்டியதைப் பதிவு செய்கிறது. [4]

மதம்[தொகு]

கலிஞ்சர் கல்வெட்டின் படி, வீரவர்மன் பல கோயில்களையும், தோட்டங்களையும், நீர்நிலைகளையும் நிறுவினார் எனத் தெரிகிறாது. சிவன், கமலா, காளி போன்ற தெய்வங்களின் உருவங்களையும் நிறுவினார். அஜய்கர் கல்வெட்டு இவரது ஆட்சியின் போது ஒரு சமண உருவத்தை நிறுவியதை பதிவு செய்கிறது. [7]

வீரவர்மனுக்குப் பிறகு போஜவர்மன் ஆட்சி செய்தான். [1]

சான்றுகள்[தொகு]

உசாத்துணை[தொகு]