உள்ளடக்கத்துக்குச் செல்

வீரராகவா செப்பேடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீரராகவ செப்புத் தகடுகளில் பொறிக்கப்பட்ட சின்னம்

வீரராகவா செப்பேடுகள், (கொச்சி, கி.பி.1225 ஆம் ஆண்டு தேதியிட்டது) [1] [2] அல்லது வீரராகவ சக்கரவர்த்தியின் கோட்டயம் ஏடுகள் (Kottayam plates of Viraraghava), அல்லது சிரியன் கிறித்தவ செப்பேடு (Syrian Christian Copper plate), அல்லது இரவி கொற்டனின் ஏடு (Iravi Kortann's Plate), என்பது மாகோதையார் பட்டினத்தில் (நவீன கொடுங்கல்லூர்) மணிக்கிரமத்தின் (மணிகிராமம்) தலைவனான சிரிய கிறித்தவ வணிகன் இரவி கொற்டனுக்கு (iravikorttan) உள்ளூர் மன்னர் வீரராகவா வழங்கிய சலுகையை விவரிக்கிறது. [3]

மணிக்கிராமம்

[தொகு]

மணிக்கிராமம் என்பது, அஞ்சுவண்ணம் மற்றும் ஐநூற்றுவர் வணிகர் சங்கம் (Merchant Guilds) போல, இடைக்கால தென்னிந்தியாவின் முக்கிய வணிகர் சங்கங்களில் (Merchant guilds in medieval South India) ஒன்றாகும். [4]

கல்வெட்டு குறிப்புகள்

[தொகு]
  • வீரராகவா குறிப்பிட்ட வீரகேரளாவின் வழித்தோன்றலாக விவரிக்கப்படுகிறார்.
  • இரவிகொற்டன் " சேர/கேரள நிலத்தின் பெரிய வணிகன்" என்று விவரிக்கப்படுகிறார்.
  • நான்கு கோயில்கள் (நாலு தளி) பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன
  • குறிப்பிட்டுள்ள சாட்சிகள்
    • பன்னியூர் மற்றும் சோக்கிரம்
    • வேணாடு, ஒடநாடு, ஏரநாடு, வள்ளுவநாடு
  • எழுதியவர் (Scribe) பெயர் - நம்பி சதேயன்
வீரராகவ செப்பேடுகள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 222, 279, and 299.
  2. Veluthat, Kesavan. The Early Medieval in South India. Delhi: Oxford University Press. 2009. 152, and 154.
  3. Epigraphica Indica, Volume IV. [V. Venkayya, 1896-97] pp. 290-7.
  4. Noburu Karashmia (ed.), A Concise History of South India: Issues and Interpretations. New Delhi: Oxford University Press, 2014. 16-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரராகவா_செப்பேடுகள்&oldid=3419498" இலிருந்து மீள்விக்கப்பட்டது