வீரமாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீரமாலை [1] என்னும் நூலைப் புதுக்கோட்டை மாவட்டம் ராங்கியம் [2] என்னும் ஊரிலுள்ள கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்த நூலை இயற்றியவர் பாண்டி கவிராயர். இந்த நூலைப் பாடியதற்காக நாயக்க மன்னரின் ஆட்சி அலுவலர் தீத்தாரியப்பப்பிள்ளை [3] என்பவரும், இராசிமங்கலம் என்னும் ஊர் மக்களும் புலவர் பாண்டி கவிராயருக்கு நிலம் வழங்கிச் சிறப்பித்தனர் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. [4]

வீரவெட்சிமாலை என்னும் சிற்றிலக்கிய வகையாக இது இருக்கலாம். வீரப்பிரதாபர் என்னும் பெயர் பெற்ற கிருஷ்ணதேவராயன் அல்லது புலவர் காலத்து அரசன் கிருஷ்ணதேவராயனின் தம்பி அச்சுத தேவ ராயன் வெற்றிகளைக் கூறுவதாக இந்த நூல் அமைந்திருக்கலாம்.

இது வீரவெண்பாமாலை என்னும் நூல் போல் மன்னனைப் போற்றி எழுதப்பட்ட நூல்.

ராங்கியம் ஆவணம்[தொகு]

"ரௌத்திரி வருடம் தை மாதம் 30 ஆம் தேதி ஸ்ரீமத் வெங்காள நாய்க்கரய்யன் காரியத்துக்குக் கர்த்தரான தீத்தாரியப்பரும் இராசிமங்கலம் ஊரவரும் புலவர் பாண்டி கவிராசர் வீரமாலை பாடுகையில் இவர்க்கு இறையிலியாக விட்ட நிலம் சந்திராதித்த வரைக்கும் பற்றி அனுபவிக்கக் கடவராகவும்"

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014, முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005. பக். 267. 
  2. நா. ஆண்டியப்பன் ஊர்
  3. விஜயநகரப் பேரரசின் மன்னான அச்சுததேவராயர்|அச்சுததேவராயரின் பிரதிநிதியாகத் தென்னகத்தில் ஆட்சி புரிந்த வெங்கள நாயக்கரின் அரசியல் அதிகாரி இந்தத் தீத்தாரியப்பப்பிள்ளை
  4. கல்வெட்டின் காலம் சக ஆண்டு 1452
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரமாலை&oldid=1491504" இலிருந்து மீள்விக்கப்பட்டது