வீரமாகாளியம்மன் கோயில், பெரம்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீரமாகாளியம்மன் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலாகும்.

புதுக்கோட்டையிலிருந்து செங்கிப்பட்டி பேருந்து சாலையில் 26 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. [1] தமிழ்நாட்டிலுள்ள குறிப்பிடத்தக்க காளியம்மன் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.

இறைவி[தொகு]

இங்குள்ள இறைவி வீரமாகாளியம்மன் ஆவார்.

சிறப்பு[தொகு]

வீரமாகாளியம்மன் கோயில் திறந்த வெளியில் அமைந்துள்ளது இக்கோயிலின் சிறப்பை உணர்த்துகிறது. தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களிலிருந்து பெருமளவில் மக்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இக்கோயில் ஒரு பிரார்த்தனைத் தலமாக உள்ளது. இக்கோயிலில் முறையிட்டு காரியம் வெற்றி பெற்றபின் காணிக்கை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சித்திரைத்திருவிழா ஒரு நாளும், வைகாசித்திருவிழா மூன்று நாளும் இக்கோயில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. [1] ஆடி கடை வெள்ளியில் சிறப்புப் பூசைகள் நடத்தப்படுகின்றன. [2]

கிடா வெட்டு பூசை[தொகு]

இக்கோயிலில் நடைபெறுகின்ற கிடா வெட்டுத்திருவிழாவின்போது ஆயிரக்கணக்கான கிடாக்கள் பலியிடப்படுகின்றன. விழாவிற்கு முதல் நாளே கந்தர்வக்கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வந்துவிடுகின்றனர். கிடா வெட்டுக்குப் பிறகு அவர்கள் குடும்பத்துடன் அசைவ உணவை சமைத்து படையலிட்டு உறவினர்களுக்கு வழங்குகின்றனர். [3]

மேற்கோள்கள்[தொகு]