வீரமல்ல பிரகாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீரமல்ல பிரகாசு
பிறப்பு15 சனவரி 1958 (1958-01-15) (அகவை 66)
பாலம்பேட், முலுகு மாவட்டம், தெலங்காணா
தேசியம்இந்தியர்
பணிஅரசியல்வாதி, எழுத்தாளர், வழக்கறிஞர்
அரசியல் கட்சிதெலுங்கானா இராட்டிர சமிதி

வீலமல்ல பிரகாசு ராவ் (Veeramalla Prakash) (1958 சனவரி 15 அன்று பிறந்தார்) தெலங்காணா பிரகாசு என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு வழக்கறிஞரும், எழுத்தாளரும், இந்தியாவின் அரசியல் கட்சியான தெலங்காணா இராட்டிர சமிதியின் இணை நிறுவனரும் ஆவார். [1]

தெலங்காணா இராட்டிர சமிதியின் பொதுச் செயலாளராகவும் செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றினார். இவர் தெலங்காணா முதலமைச்சரின் கொள்கை ஆலோசகராகவும், தெலங்காணா நீர்வள மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகவும் உள்ளார். கட்சி உருவானதிலிருந்து தெலங்காணா மாநிலப் போராட்டத்தை வழிநடத்துவதில் இவர் தீவிர பங்கு வகித்தார். இவர் நீர்ப்பாசனத் துறையிலும், கொள்கை வகுப்பிலும் நிபுணராகக் கருதப்படுகிறார். [2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவரது, முழுப்பெயர் வீரமல்ல பிரகாசு ராவ் என்பதாகும். இவர் முலுகு மாவட்டத்தின் (வாரங்கல்) பாலம்பேட்டில் இராஜா நரசிங்க ராவ், கௌசல்யா ஆகியோருக்கும் பிறாந்தார். இவரது தந்தை ஐதராபாத் நிசாம் அரசிடம் பணிபுரிந்து வந்தார்.

கல்வி[தொகு]

பாலம்பேட், நல்லகுந்தா, அனம்கொண்டா மற்றும் முலுக் அரசு பள்ளிகளில் தொடக்க, மேல்நிலை மற்றும் இடைநிலைக் கல்வியை முடித்தார். பின்னர் இவர் இடைநிலைக்கான ஏ.வி.வி இளையோர் கல்லூரியிலும், பட்டப்படிப்புக்காக சி.கே.எம் கல்லூரி (இளங்கலை அறிவியல்) ஆகியவற்றில் சேர்ந்தார், இவை இரண்டும் வாரங்கலில் மறைந்த சந்தா காந்தையா என்பவரால் நிறுவப்பட்ட உதவி கல்லூரிகள் ஆகும். இவர், 1981 இல் ஐதராபாத்திலுள்ள உசுமானியா பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முதுகலையையும், வாரங்கலின் ககாதியா பல்கலைக்கழகத்தில் சட்டமும் பெற்றார். பின்னர், ஆந்திராவின் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

இயக்கங்கள்[தொகு]

இவர், 1969 - 1970 இல் 7 - 8 ஆம் வகுப்பு மாணவர்களாக இருந்தபோது தெலங்காணா தனி மாநில இயக்கத்தில் பங்கேற்றார். நெருக்கடி நிலைப் பிறகு தீவிர மாணவர்கள் மற்றும் புரட்சிகர இயக்கங்கள் மீது இவர் ஆர்வம் காட்டியுள்ளார். இந்திய விடுதலை வீரர் சத்தியமூர்த்தி உருவாக்கிய மக்கள் இயக்கத்தை நடத்தி வரும் கொண்டப்பள்ளி சீதாராமையாவை சந்தித்தார். இந்தியாவை விடுவிப்பதற்கான அவர்களின் தந்திரோபாயங்கள், உத்திகள் மற்றும் புரட்சியின் பாதை குறித்து வாதிட்டனர். மேலும், நிர்மூலமாக்கல் செயலை கடுமையாக விமர்சித்தார். பின்னர், ஜனநாயக மாணவர் இயக்கத்தில் ஜனநாயக மாணவர் அமைப்பின் செயலாளராக சேர்ந்தார். இது தரிமேலா நாகி ரெட்டி மற்றும் தேவுலப்பள்ளி வெங்கடேசுவர ராவ் ஆகியோரால் தொடங்கப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. http://news.rediff.com/report/2010/feb/12/andhra-crisis-telangana-issue-being-put-in-cold-storage.htm
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-08-11. பார்க்கப்பட்ட நாள் 2021-01-29. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரமல்ல_பிரகாசு&oldid=3572134" இலிருந்து மீள்விக்கப்பட்டது