வீரப்பன் வீராத்தான்
வீரப்பன் வீராத்தான் Veerappen Veerathan | |
|---|---|
| மலேசிய மக்களவை உறுப்பினர் செபராங் செலாத்தான் மக்களவைத் தொகுதி | |
| பதவியில் 1959–1964 | |
| பெரும்பான்மை | 764 (1959) |
| மலேசிய மக்களவை உறுப்பினர் செபராங் செலாத்தான் மக்களவைத் தொகுதி | |
| பதவியில் 1969–1974 | |
| பெரும்பான்மை | 3,347 (1969) |
| பினாங்கு மாநில சட்டமன்ற உறுப்பினர் சுங்கை பாக்காப் சட்டமன்றத் தொகுதி | |
| பதவியில் 1969–1974 | |
| பெரும்பான்மை | 2,484 (1969) |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| குடியுரிமை | மலேசியர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி |
|
| பணி | வழக்கறிஞர்; அரசியல்வாதி |
வீரப்பன் வீராத்தான் அல்லது வீ. வீரப்பன் (ஆங்கிலம்: Veerappen Veerathan அல்லது V. Veerappen; மலாய்: Veerappen Veerathan) என்பவர் மலேசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி; மற்றும் மலேசிய வழக்கறிஞர்; மலேசிய மக்களவையில் செபராங் செலாத்தான் மக்களவைத் தொகுதி (1959 - 1964); செபராங் செலாத்தான் மக்களவைத் தொகுதி (1969 - 1974) உறுப்பினராகவும்; பினாங்கு மாநில சட்டமன்றத்தில் சுங்கை பாக்காப் சட்டமன்றத் தொகுதி (1969 - 1974) உறுப்பினராகவும் சேவை செய்தவர் ஆவார்.[1]
இவர் டாக்டர் லிம் சோங் இயூ (Dr. Lim Chong Eu), டான் சீ கூன் (Dr. Tan Chee Khoon) மற்றும் டாக்டர். சையத் உசைன் அலாத்தாஸ் (Dr. Syed Hussein Alatas) ஆகியோருடன் இணைந்து கெராக்கான் (ஆங்கிலம்: Malaysian People's Movement Party; மலாய்: Parti Gerakan Rakyat Malaysia (Gerakan); கட்சியை நிறுவியவர். அதற்காக மலேசிய அரசியலில் நன்கு அறியப் பட்டவரும் ஆவார்.[2] மலேசிய இந்தியர்களின் அரசியல் வரலாற்றில் தடம் பதித்த இந்தியர் முன்னோடிகளில் வீ. வீரப்பன் அவர்களின் இந்தியச் சமூகப் போராட்டாங்கள் என்றும் நிலைத்து நிற்கும்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]வழக்கறிஞராகப் பணியாற்றிய அவர், பெகெமாஸ் எனும் சோசலிச முன்னணியின் (SF) ஒரு பகுதியாக இருந்த மலாயா மக்கள் சோசலிச முன்னணி (Malayan Peoples' Socialist Front) கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 1959-இல் செபராங் செலாத்தான் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] ஏப்ரல் 1964-இல் அதே தொகுதியில் போட்டியிட்டு, மலேசியக் கூட்டணியின் முகமது நூர்டின் மஸ்தான் என்பவரிடம் 4,105 வாக்குகள் வேறுபாட்டில் தோல்வியடைந்தார்.
பொது
[தொகு]1972-ஆம் ஆண்டு, அவர் கெராக்கான் கட்சியில் இருந்து வெளியேறி, மலேசிய சமூக நீதிக் கட்சி (Malaysian Social Justice Party) (PEKEMAS); மலாய்: Parti Keadilan Masyarakat Malaysia) என்ற ஒரு புதிய கட்சியை நிறுவினார்.[5]
1959-ஆம் ஆண்டு மலாயா பொதுத் தேர்தலில், பினாங்கு, செபராங் செலாத்தான் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். அந்தத் தேர்தலில், மலாயா தொழிலாளர் கட்சியின் (Labour Party of Malaya) சார்பில் போட்டியிட்டார்.
மலேசிய மக்கள் இயக்கக் கட்சி
[தொகு]1969 பொதுத் தேர்தலில், மீண்டும் அதே பினாங்கு செபராங் செலாத்தான் மக்களவைத் தொகுதியில் கெராக்கான் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[6]
மலேசிய அரசியலில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் மாண்புமிகு வீரப்பன் மிகவும் பிரபலமானவர். அதே வேளையில் மலேசிய இந்தியர்களின் செல்வாக்கைப் பெற்றவர். இவருடைய பெயரில் வீரப்பன் சாலை (Jalan Veerappan, Bukit Panchor) என்று பினாங்கில் ஒரு சாலைக்குப் பெயர் வைக்கப்பட்டு உள்ளது.[7]
தேர்தல் முடிவுகள்
[தொகு]மலேசிய மக்களவை
[தொகு]| ஆண்டு | தொகுதி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
% | எதிரணி | வாக்குகள் | % | பதிவான வாக்குகள் |
பெரும் பான்மை |
% | ||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 1959 | P033 செபராங் செலாத்தான் | வீரப்பன் வீராத்தான் (தொழிலாளர்) | 5,077 | 40.67% | தே ஊய் சூ (மசீச) | 4,313 | 34.55% | 12,590 | 764 | 79.08% | ||
| ஜெய்ஸ் சுதின் (பாஸ்) | 3,093 | 24.78% | ||||||||||
| ஆண்டு | தொகுதி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
% | எதிரணி | வாக்குகள் | % | பதிவான வாக்குகள் |
பெரும் பான்மை |
% | ||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 1964 | P033 செபராங் செலாத்தான் மக்களவைத் தொகுதி | வீரப்பன் வீராத்தான் (தொழிலாளர்) | 6,322 | 36.74% | முகமது நூர்தீன் மஸ்தான் (அம்னோ) | 10,427 | 60.60% | 17,909 | 4,105 | 84.48% | ||
| முகமது நூர் மொக்தார் (பாஸ்) | 457 | 2.66% | ||||||||||
| 1964 | வீரப்பன் வீராத்தான் (தொழிலாளர்) | 7,296 | 43.97% | சினாவி இசுமாயில் (அம்னோ) | 9,298 | 56.03% | 16,791 | 2,002 | NA | |||
| 1969 | வீரப்பன் வீராத்தான் (கெராக்கான்) | 9,738 | 52.35% | சினாவி இசுமாயில் (அம்னோ) | 6,391 | 34.35% | 19,287 | 3,347 | 78.49 | |||
| வகாப் சாலே (பாஸ்) | 2,474 | 13.30% | ||||||||||
| 1974 | P039 நிபோங் திபால் | வீரப்பன் வீராத்தான் (பெகெமாஸ்) | 3,155 | 16.13% | கோ செங் தெய்க் (கெராக்கான்) | 11,271 | 57.63% | 22,181 | 6,139 | 86.07 | ||
| கே. பொன்னுதுரை (ஜசெக) | 5,132 | 26.24% | ||||||||||
பினாங்கு மாநில சட்டமன்றம்
[தொகு]| ஆண்டு | தொகுதி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
% | எதிரணி | வாக்குகள் | % | பதிவான வாக்குகள் |
பெரும் பான்மை |
% | ||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 1959 | சுங்கை பாக்காப் | வீரப்பன் வீராத்தான் (தொழிலாளர்) | 2,413 | 34.80% | கீ யோங் சின் (மசீச) | 3,115 | 47.10% | 7,029 | 2,720 | 77.30% | ||
| நூர் மகமூத் (சுயேச்சை) | 1,255 | 18.10% | ||||||||||
| 1969 | வீரப்பன் வீராத்தான் (கெராக்கான்) | 5,519 | 51.86% | கீ யோங் சின் (மசீச) | 3,115 | 29.27% | 11,355 | 2,484 | 80.60% | |||
| நூர் மகமூத் (சுயேச்சை) | 2,008 | 18.87% | ||||||||||
| 1974 | புக்கிட் தம்புன் | வீரப்பன் வீராத்தான் (பெகெமாஸ்) | 936 | 16.90% | நிங் சுவீ சிங் (ஜசெக) | 2,367 | 42.73% | 5,836 | 130 | 83.80% | ||
| தியோ கூய் சினே (மசீச) | 2,237 | 40.38% | ||||||||||
மேற்கோள்
[தொகு]- ↑ "Tuan V.Veerappen". Parliament of Malaysia. Retrieved 25 January 2026.
- ↑ http://aliran.com/archives/monthly/2005a/6e.html
- ↑ https://malaysianaarchivesphs.wordpress.com/v-veerappen-collection/
- ↑ https://m.aliran.com/200810/the-labour-party-of-malaya-19521972
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-05-11. Retrieved 2022-12-20.
- ↑ "V. Veerappen Collection". MALAYSIANA & ARCHIVES DIVISION (in ஆங்கிலம்). 29 March 2018. Retrieved 25 January 2026.
- ↑ "Jalan Veerappan off Bukit Panchor, Taman Veerappan, 14300, Penang". Retrieved 20 December 2022.