வீரபாண்டியன் குடைமங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீரபாண்டியன் குடைமங்கலம் [1] என்னும் நூல் காசிக்கலியன் கவிராயர் என்பவரால் எழுதப்பட்ட நூல் என்பதைத் தென்காசி விஸ்வநாதர் கோயில் கோபுர வாயில் நிலையில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு குறிப்பிடும் நூல் ஆகும்.

குடை மங்கல ஆவணப் பாடல்[தொகு]

சேண் உலவு வெண் திங்கள் செல்வன் எனத் 'தண்'என்று
நீள் நிலம் ஓர் ஏழும் நிழற்றுமே - பேணி வந்து
பூ வேந்தர் ஏத்தும் புகழ் வீரபாண்டியன் நம்
கோ வேந்தன் கொற்றக் குடை. [2]

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014, முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005. பக். 285. 
  2. வெண்பா யாப்பில் அமைந்துள்ள இந்தப் பாடல் பொருள்நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது