வீரத்தியாகி விஸ்வநாததாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வீரத்தியாகி விஸ்வநாததாஸ்

             இந்திய விடுதலைப்போராட்டத்தின்போது  நாடகங்களின் மூலம் நாட்டுப்பற்றை விதைத்தவர் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் ஆவார் .1886ல் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் சுப்பிரமணியம் -ஞானாம்பாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார்.சங்கீதம் கற்றார்.நடிப்புத்திறமையை வளர்த்துக்கொண்டார்.1906ல் சண்முகத்தாய் என்பவரை திருமணம் செய்தார்.1925ல் காந்தியடிகள் தூத்துக்குடி வந்தபோது இவரது நடிப்புத்திறனையும்,தேசபக்தியையும் பாராட்டினார்.
              1940ம் ஆண்டு டிசம்பர் 31ம் நாள் சென்னையில் உள்ள ராயல் திரையரங்கில் விஸ்வநாததாஸ்நடிக்கும்" வள்ளி திருமணம்" நாடகம் நடந்தது.முருகனாக நடித்த வீரத்தியாகி விஸ்வநாததாஸ் "மாயா பிரபஞ்சத்திலே"என்ற பாடலைப்பாடி நடித்துக்கொண்டிருந்தபோதே உயிர் நீத்தார்.1941ம் ஆண்டு ஜனவரி 1ம் நாள் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் அவர்களின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

மேற்கோள்:1.தினத்தந்தி,15.08.2014,பக்க எண் :17. 2.தினத்தந்தி,15.08.2015,பக்க எண் :18.