உள்ளடக்கத்துக்குச் செல்

வீரசோழன்

ஆள்கூறுகள்: 9°32′43″N 78°21′44″E / 9.54528°N 78.36222°E / 9.54528; 78.36222
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீரசோழன்
—  நகரம்  —
வீரசோழன்
இருப்பிடம்: வீரசோழன்

, தமிழ் நாடு , இந்தியா

அமைவிடம் 9°32′43″N 78°21′44″E / 9.54528°N 78.36222°E / 9.54528; 78.36222
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
ஊராட்சித் தலைவர் முஹம்மது சாதிக் அலி
மக்கள் தொகை 4,905 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

வீரசோழன் (Veeracholan) இந்தியாவின், தமிழக மாநிலத்தின், விருதுநகர் மாவட்டத்தை மாவட்டத்தை சேர்ந்த திருச்சுழி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். இவ்வூர் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியையும், திருச்சுழி (சட்டமன்றத் தொகுதி)யையும் சேர்ந்தது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5,746 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 2,923 ஆண்கள், 2,823 பெண்கள் ஆவார்கள். வீரசோழன் மக்களின் சராசரி கல்வியறிவு 83.37% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வீரசோழன் மக்கள் தொகையில் 14.6% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். 1341 வீடுகளும் உள்ளன.

பள்ளிகள்

[தொகு]
  • 2 அரசு தொடக்கப்பள்ளிகளும், 1 உயர்நிலை பள்ளியும் உள்ளது.
  • அஸ்மா மெட்ரிகுலேசன் என்ற தனியார் உயர்நிலை பள்ளியும் உள்ளது.
  • மதரசா கைராத்துல் இஸ்லாம் என்ற அரபிக்கல்லூரி உள்ளது. இங்கு இசுலாமியக் கல்வியும், மதுரை காமராசர் பல்கலைகழகத்தின் தொலைநிலைக்கல்வி மூலமாக இளங்கலை பட்டப்படிப்பும், முதுகலை பட்டப்படிப்பும் கற்பிக்கப்படுகிறது.

வழிபாட்டுத்தலங்கள்

[தொகு]

ஜும்-ஆ மசூதி, சின்னமசூதி, மதரசா மசூதி, ஆகிய 3 மசூதிகள் உள்ளன. ஸ்ரீ ஹரி சக்கர மூர்த்தி பெருமாள் கோவில் மற்றும் ஈஸ்வரன் கோவில் மற்றும் சிறுதெய்வ கோவில் ஆகிய கோவில்களும் உள்ளன.

போக்குவரத்து வசதிகள்

[தொகு]

காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ச்சியான பேருந்து வசதி உள்ளது.

ஆதாரங்கள்

[தொகு]
  1. http://www.census2011.co.in/data/village/641567-veeracholan-tamil-nadu.html - Virudhunagar District;Tiruchuli Taluk;Veeracholan Village 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரசோழன்&oldid=3749818" இலிருந்து மீள்விக்கப்பட்டது