வீரசைவ அடிகளார் - அக்கம்மாதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வீரசைவ அடிகளார் - அக்கம்மாதேவி

கர்நாடக மாநிலத்தில் வீர சைவத்தை பின்பற்றி சிவனையே கணவராக கருதியவர். கன்னட மொழியில் பக்தி இலக்கியம் படைத்தவர் அக்கம்மாதேவி.

பிறப்பு[தொகு]

கருநாடக மாநிலத்தில் உடுதடி என்ற ஊரில், வீரசைவ மரபைச் சேர்நத நிர்மலன், சுமதி என்பவர்களுக்கு மகளாகப் பிறந்தார். இளமையிலேயே சிவபெருமானிடம் காதல் கொண்டு, அவரைத் தம் கணவராகக் கருதி வளர்ந்து வந்தார். பக்தி, கல்வி, வீரசைவ சமய அறிவு, இலக்கியப் படைப்பாற்றல் ஆகிய பண்புகளைப் பெற்றுச் சிறந்து விளங்கினார்.

அக்கமாதேவி[தொகு]

வீரசைவத்தை வளர்த்தவர்களில் ஒருவர் என்னும் பாராட்டைப் பெற்று, கருநாடக நாட்டு மக்களால், 'அக்கா' என்று அன்போடு அழைக்கப்பட்டார். எனவே, 'மகாதேவியக்கா' என்றும், 'அக்கமாதேவி' என்ம் குறிப்பிடப் பெறுகின்றார். அக்கமாதேவிக்குத் திருமணம் நடந்தது என்றும், நடக்கவில்லை என்றும் இருவேறு கருத்துகள் உள. ஆனால், அவர் இளமைப் பருவத்திலிருந்தே சிவபெருமானையே தம் கணவராகக் கருதியிந்ததையே அவரது பாடல்கள் புலப்படுகின்றன.

இறைவனுடன் கலத்தல்[தொகு]

அக்கமாதேவி கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டளவில் வாழ்ந்தவர். அக்காலத்தில் கன்னட நாட்டில் சிறந்த சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனையாளராகவும், வீரசைவ சமய ஞானியாகவும் விளங்கிய பசவண்ணர் என்பவர் வாழ்ந்த கல்யாண் நகர் சென்றடைந்தார் அக்கமாதேவி. அங்கு வீரசைவ அடியார்களாகிய பசவர், பிரபுதேவர் ஆகியோருடன் உரையாடி மகிழ்ந்தார். பின்னர் ஸ்ரீசைலம் சென்று, இறைவனுடன் இணைந்தார்.

படைப்புகள்[தொகு]

அக்கமாதேவியின் படைப்புகள் வசன இலக்கிய வகையச் சார்ந்தது. 316 வசனங்கள் யோகாங்கதிரி விரி, சிருட்டி பற்றிய வசனம் கன்னட இலக்கியத்தில் இடம்பெறுகின்றன.

அழகு என்பது

"கண்ணுக்கழகு குருவையும் பெரியோரையும் காணுதல்

காதுக்கழகு பெரியோரின் புகழ்ப்பாடல்களைக் கேட்டல்

சொல்லுக்கழகு உண்மை பேசுதல்'

உரையாடலுக் கழகு நல்ல பக்தர்களின் சொற்களைக் கூறல்

வாழும் வாழ்க்கைக்கு அழகு நல்லோர் தொடர்பு

இவையற்ற வாழ்க்கை வாழ்தல்

எதற்குப் பயனய்யா, சென்னமல்லிகார்ச்சுனா!"

என்று ஸ்ரீசைலத்தில் கோவில் கொண்டுள்ள இறைவனின் திருநாமத்தை ஈற்றில் வைத்து வசனத்தில் இயம்புகிறார். சமயத்சாதனை, இலக்கியச் சாதனை, பெண் ஆன்ம உரிமைச் சாதனை இம்மூன்றும் அக்கம்மாதேவியாரின் சாதனைகள் என கூறலாம்.

மேற்கோள்கள்[தொகு]

1. வீரசைவம்

2. அக்கமாதேவி

3. ஸ்ரீசைலம்

4. யோகாங்கதிரி விரி