வீனின் இடப்பெயர்ச்சி விதி
Appearance
வீனின் இடப்பெயர்ச்சி விதி (Wien's displacement law) கரும்பொருள் ஒன்றில் இருந்து எந்த வெப்பநிலையிலும் வெளியேறும் வெப்பக் கதிர்வீசலின் அதிக ஆற்றல் கொண்ட அலைநீளம் அதனுடைய தனிவெப்பநிலை T க்கு எதிர் மாறு விகிதத்தில் இருக்கும் எனப் பகருகிறது. வெப்பவியக்கவியல் அடிப்படையில் இவ்விதியை 1893 ஆம் ஆண்டில் நிறுவிய வில்லெம் வீன் என்பவரின் பெயரில் இவ்விதி அழைக்கப்படுகிறது.
இங்கு,
- λmax - உயர் அலைநீளம்,
- T - கரும்பொருளின் தனி வெப்பநிலை,
- b = 2.8977685(51)×10−3 m·K, விகித மாறிலி, அல்லது வீனின் இடப்பெயர்ச்சி மாறிலி என அழைக்கப்படுகிறது.[1]
கட்புலனாகும் நிறமாலைக்குக் கிட்டவாக உள்ள அலைநீளங்களுக்கு, மீட்டர் அளவுக்குப் பதிலாக நானோமீட்டர் அளவு பயன்படுத்தப்படுகிறது. இங்கு, b = 2897768.5(51) nm·K ஆகும்.
பிளாசுமா வெப்பநிலைகளில் இலத்திரன்வோல்ட் அலகு பயன்படுத்தப்படுகிறது. இங்கு விகித மாறிலி b = 249.71066 nm·eV ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Wien wavelength displacement law constant". NIST. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 7, 2016.