வீணா தேவி (வைசாலி)
வீணா தேவி | |
---|---|
வீணா தேவி 2010-ல் | |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | இராம கிசோர் சிங் |
தொகுதி | வைசாலி |
பீகார் சட்டமன்றம் | |
பதவியில் 2010–2015 | |
முன்னையவர் | மகேசுவர் யாதவ் |
பின்னவர் | மகேசுவர் யாதவ் |
தொகுதி | கெய்காட் சட்டமன்றத் தொகுதி |
துணைத்தலைவர், இந்திய மாவட்ட குழு | |
பதவியில் 2006–2010 | |
தொகுதி | முசாபர்பூர் |
தலைவர், இந்திய மாவட்ட குழு | |
பதவியில் 2001–2006 | |
தொகுதி | முசாபர்பூர் |
3வது நாடாளுமன்ற கட்சி தலைவர் (இராலோஜச) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 செப்டம்பர் 2021 | |
முன்னையவர் | சிரக் பஸ்வான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 ஏப்ரல் 1967 |
அரசியல் கட்சி | ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி லோக் ஜனசக்தி கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | தினேஷ் பிரசாத் சிங் (before 1984) |
பிள்ளைகள் | 4 |
வாழிடம்(s) | முசாபர்பூர், பீகார், இந்தியா |
வீணா தேவி (Veena Devi)(பிறப்பு 22 ஏப்ரல் 1967) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பீகார் மாநிலம் வைசாலி மக்களவையின் தற்போதைய உறுப்பினர் ஆவார் . இவர் கைகாட் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சியுடன் இணைந்து வைசாலியில் போட்டியிட்டு ரகுவன்ஷ் பிரசாத் சிங்கை தோற்கடித்தார்.[1]
அரசியல் வாழ்க்கை
[தொகு]செப்டம்பர் 2, 2021 அன்று, சிராக் குமார் பாஸ்வானுக்குப் பதிலாக லோக் ஜனசக்தி கட்சியின் நாடாளுமன்றத் தலைவரானார்.[2]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]தேவி 22 ஏப்ரல் 1967 அன்று பீகாரில் உள்ள தர்பங்காவில் உபேந்திர பிரசாத் சிங் மற்றும் சபுஜ்கலா தேவிக்கு மகளாகப் பிறந்தார். இவர் மேல்நிலைக் கல்வி கற்றுள்ளார்.[3] இவர் 27 ஏப்ரல் 1984-ல் முசாபர்பூர் சட்ட மேலவை உறுப்பினர் தினேஷ் பிரசாத் சிங்கை மணந்தார்.[3] இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.[3] இவர் தௌத்பூர் கிராமத்தில் வசிக்கிறார்.[4]
2010ல் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் கைகாட்டில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.இவர் முசாபர்பூரின் முன்னாள் தலைவராக இருந்தார்.[5] [6] இவர் 2001-ல் முசாபர்பூர் மாவட்டத்தின் தலைவராகவும், 2006-ல் துணைத்தலைவராகவும் ஆனார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kumar, Abhay (24 March 2019). "For Bihar NDA, blood is thicker than sweat". Deccan Herald. https://www.deccanherald.com/national/national-politics/for-bihar-nda-blood-is-thicker-than-sweat-724832.html.
- ↑ https://navbharattimes.indiatimes.com/state/bihar/patna/bihar-news-pashupati-kumar-paras-removed-chirag-paswan-from-the-post-of-ljp-parliamentary-board-chairman-and-handed-over-chair-to-veena-devi/articleshow/85863265.cms.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ 3.0 3.1 3.2 "Members : Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 24 February 2020.
- ↑ "VEENA DEVI (Bharatiya Janata Party(BJP)):Constituency- Gaighat(MUZAFFARPUR) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2 February 2020.
- ↑ "Assembly Election Result 2016, Assembly Election Schedule Candidate List, Assembly Election Opinion/Exit Poll Latest News 2016".
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-01-23. பார்க்கப்பட்ட நாள் 2022-01-16.