வீட்டு காப்புறுதிக் கட்டடம்

ஆள்கூறுகள்: 41°52′47″N 87°37′55″W / 41.8796°N 87.6320°W / 41.8796; -87.6320
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீட்டுக் காப்புறுதிக் கட்டடம், சிக்காகோ

உலகின் முதல் வானளாவி (First Skyscraper) ஆக அமெரிக்காவில், 1885 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வீட்டு காப்புறுதிக் கட்டடம் (Home Insurance Building) என கருதப்படுகிறது. இது 10 அடுக்கு மாடிகளைக் கொண்ட கட்டடமாகும். இதன் உயரம் 138 அடிகள் ஆகும்.[1] 1885 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இருந்த உயரமான கட்டம் இதுவாகவே இருந்துள்ளது. இந்த கட்டடத்தையே உலகின் முதல் வானளாவி எனப்படுகின்றது.

இக்கட்டடம் செங்கல் மற்றும் இரும்புகளால் கட்டப்பட்டதாகும். இதன் கட்டடக் கலைஞர் "வில்லியம் லெபறொன் ஜென்னி" (William LeBaron Jenney) என்பவராகும். இக்கட்டடம் 1931 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டுவிட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]