வீட்டுச் சிட்டுக்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

Filozoa

வீட்டுச் சிட்டுக்குருவி
Passer domesticus male (15).jpg
ஜெர்மனியில் ஒரு ஆண்
House Sparrow, England - May 09.jpg
இங்கிலாந்தில் ஒரு பெண்
உயிரியல் வகைப்பாடு e
இராச்சியம்: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பேசரிபார்மசு
குடும்பம்: பேஸ்ஸரிடே
பேரினம்: Passer
இனம்: P. domesticus
இருசொற் பெயரீடு
Passer domesticus
(லின்னேயஸ், 1758)
PasserDomesticusDistribution.png
      பூர்வீக வாழ்விடங்கள்
       அறிமுகப்படுத்தப்பட்ட வாழ்விடங்கள்
வேறு பெயர்கள் [2]

Fringilla domestica லின்னேயஸ், 1758
Passer domesticus (லின்னேயஸ், 1758) பிரிசன், 1760
Pyrgita domestica (லின்னேயஸ், 1758) குவியர், 1817
Passer indicus சர்டின் மற்றும் செல்பை, 1835
Passer arboreus போனாபர்டே, 1850 (அருஞ்சொல்)
Passer confucius போனாபர்டே, 1853
Passer rufidorsalis சி.எல்.பிரெம், 1855
Passer engimaticus சருட்னி, 1903
Passer ahasvar கிலெயின்சுமித், 1904

வீட்டுச் சிட்டுக்குருவி (ஆங்கிலப் பெயர்: house sparrow, உயிரியல் பெயர்: Passer domesticus) என்பது சிட்டுக்குருவிக் குடும்பமான பேஸ்ஸரிடேவில் உள்ள ஒரு பறவை ஆகும். இது உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. இது ஒரு சிறிய பறவை ஆகும். பொதுவாக இதன் நீளம் 16 செ.மீ., எடை 24-39.5 கிராம் இருக்கும்.[3] பெண் சிட்டுக்குருவிகள் மற்றும் குஞ்சுகள் வெளிர் பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்திலும், மற்றும் ஆண் சிட்டுக்குருவிகள் பிரகாசமான கருப்பு, வெள்ளை, மற்றும் பழுப்பு அடையாளங்களுடனும் காணப்படும். பேஸ்ஸர் பேரினத்தில் உள்ள 25 இனங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் பூர்வீகம் பெரும்பகுதி ஐரோப்பா, மத்தியத்தரைக்கடல் பகுதிகள் மற்றும் பெரும்பகுதி ஆசியா ஆகும். இது வேண்டுமென்றோ அல்லது விபத்தாகவோ ஆத்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கக் கண்டங்களின் பெரும்பகுதிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இது அதிகபட்சமாகப் பரவிய காட்டுப் பறவையாக உள்ளது.

உசாத்துணை[தொகு]