வி. வீரசிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வி. வீரசிங்கம்
V. Veerasingam

நாஉ
வட்டுக்கோட்டை தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1952–1956
முன்னவர் கே. கனகரத்தினம்
பின்வந்தவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்
தனிநபர் தகவல்
பிறப்பு 1892
இறப்பு 5 திசம்பர் 1964(1964-12-05)
தொழில் ஆசிரியர்
இனம் இலங்கைத் தமிழர்

விசுவலிங்கம் வீரசிங்கம் (Visuvalingam Veerasingam, 1892 - 5 டிசம்பர் 1964) இலங்கைத் தமிழ் ஆசிரியரும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டுறவாளரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

வீரசிங்கம் 1892 ஆம் ஆண்டில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் நகரில் பிறந்தவர்.[1] மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார். இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் பயின்று பொருளாதாரம், கல்வி, தமிழ் ஆகிய பாடங்களில் இலண்டன் பல்கலைக்கழக பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.[2] மானிப்பாய் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக இணைந்த இவர் 1922 ஏப்ரலில் கல்லூரியின் அதிபரானார்.[1][3] இளம் வயதிலேயே வாழ்க்கைத் துணையை இழந்தார். மறுமணம் செய்யவில்லை.[2]

1951 ஆம் ஆண்டில் ஆசிரியப் பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான கூட்டுறவு இயக்கத்தின் முக்கிய பங்காற்றலானார். யாழ் மாவட்டத்துக்கான கூட்டுறவு சங்கத்தின் முதலாவது தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இறக்கும் வரையில் அப்பதவியில் இருந்தார். யாழ்ப்பாண நகரில் கூட்டுறவு சங்கத்தினால் அமைக்கப்பட்ட வீரசிங்கம் மண்டபத்திற்கு இவரது நினைவாக அப்பெயர் சூட்டப்பட்டது.[1][3]

அரசியலில்[தொகு]

1947 நாடாளுமன்றத் தேர்தலில் வீரசிங்கம் சுயேட்சை வேட்பாளராக வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் முதற்தடவையாகப் போட்டியிட்டு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் க. கனகரத்தினத்திடம் தோற்றார்.[4] ஆனாலும், 1952 தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு கனகரத்தினத்தை 420 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[5]

1952 சனவரியில் இவர் பிரித்தானிய இராச்சியத்தின் Order of the British Empire விருதைப் பெற்றார்.[6]

நினைவு[தொகு]

  • யாழ்ப்பாண நகரில் உள்ள வீரசிங்கம் மண்டபத்திற்கு இவரது நினைவாக பெயர் சூட்டப்பட்டது.[1]
  • விஸ்வலிங்கம் வீரசிங்கம் ஞாபகார்த்த அஞ்சல்தலை 2016 மே 27 அன்று இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிடப்பட்டது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 243. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon. 
  2. 2.0 2.1 "மக்களோடு மக்களாக வாழ்ந்தவர் அமரர் விஸ்வலிங்கம் வீரசிங்கம்". வீரகேசரி. 29 மே 2016. 
  3. 3.0 3.1 Somasunderam, Subramaniam (5 அக். 2004). "Manipay Hindu College in my time - an alumnus remembers". டெய்லி நியூஸ். Archived from the original on 5 பெப். 2005. http://web.archive.org/web/20050205101654/http://www.dailynews.lk/2004/10/05/fea05.html. 
  4. "Result of Parliamentary General Election 1947". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  5. "Result of Parliamentary General Election 1952". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  6. "Fourth Supplement". இலங்டன் கசெட். 28 டிசம்பர் 1951. http://www.london-gazette.co.uk/issues/39424/supplements/46. 
  7. "அமரர் வீரசிங்கம் ஞாபகார்த்த அஞ்சல்தலை வெளியீடு!". நானிலம். பார்த்த நாள் 29 மே 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._வீரசிங்கம்&oldid=2238609" இருந்து மீள்விக்கப்பட்டது