வி. வி. கிரியேசன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வி. வி. கிரியேசன்ஸ்
வகைதிரைப்படத் தயாரிப்பு
நிறுவுகை1984
தலைமையகம்தமிழ்நாடு, இந்தியா
முக்கிய நபர்கள்ஷோபா சந்திரசேகர்
எஸ். ஏ. சந்திரசேகர்
தொழில்துறைதிரைப்படம்

வி. வி. கிரியேஷன்ஸ் (V. V. Creations) என்பது ஒரு தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆகும். இதன் உரிமையாளர் எஸ். ஏ. சந்திரசேகரின் மனைவி ஷோபா சந்திரசேகர் ஆவார். [1]

வரலாறு[தொகு]

வி. வி. கிரியேஷன்ஸ் என்ற பெயரானது சோபா சந்திர சேகரின் மகன் விஜய் மற்றும் அவரது மறைந்த சகோதரி வித்யா ஆகியோரின் பெயரில் உள்ள முதல் எழுத்தைக் கொண்டு இடப்பட்டது. வி. வி. கிரியேஷன்ஸ் 1984 ஆம் ஆண்டில் விசயகாந்து மற்றும் சரிதா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய வீட்டுக்கு ஒரு கண்ணகி படத்தை தயாரித்தது. இந்த தயாரிப்பு நிறுவனம் பின்னர் விஜயகாந்த் நடித்த மேலும் ஐந்து படங்களை தயாரிக்க, எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கினார். 1991 ஆம் ஆண்டில், ஷோபா சந்திரசேகர் இயக்கிய நண்பர்கள் படத்தையும் தயாரித்தது. இந்த படம் திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடியது. [2] நண்பர்களின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்து ஷோபா சந்திரசேகரின் இயக்கத்தில் இன்னிசை மழை படத்தை இந்நிறுவனத்தின் சார்பில் தயாரித்தனர். [3] 1992 ஆம் ஆண்டின் இறுதியில், எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் தங்கள் மகன் விஜயை நாயகனாக அறிமுகப்படுத்திய நாளைய தீர்ப்பு படத்தைத் தயாரித்தனர். பின்னர் இவர்கள் நெஞ்சினிலே மற்றும் பந்தயம் ஆகிய படங்களை தயாரித்தனர்.

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு தலைப்பு இயக்குனர் நடிகர்கள் குறிப்புகள்
1984 வீட்டுக்கு ஒரு கண்ணகி எஸ். ஏ. சந்திரசேகர் விசயகாந்து, சரிதா
1985 புது யுகம் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்த், சிவகுமார், சுரேஷ்
1985 நீதியின் மறுபக்கம் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்த், ராதிகா
1986 வசந்த ராகம் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்த், சுதா சந்திரன், ரகுமான்
1987 சட்டம் ஒரு விளையாட்டு எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்த், ராதா
1989 ராஜநடை எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்த், சீதா, கௌதமி, சுரேஷ்
1991 நண்பர்கள் ஷோபா சந்திரசேகர் நீரஜ், மம்தா குல்கர்னி
1992 இன்னிசை மழை ஷோபா சந்திரசேகர் நீரஜ், பர்வீன்
1992 நாளைய தீர்ப்பு எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய், கீர்த்தனா
1999 நெஞ்சினிலே எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய், இஷா கோப்பிகர்
2006 ஆதி ரமணா விஜய்
2008 பந்தயம் எஸ்.ஏ.சந்திரசேகர் நிதின் சத்யா, சிந்து துலானி

குறிப்புகள்[தொகு]

 

  1. "SA Chandrasekhar — A proud father". indiaglitz.com (30 September 2008).
  2. V. S. Srinivasan (14 April 1998). "The reluctant sex symbol". rediff.com.
  3. S.R. Ashok Kumar (14 April 2006). "A celebrity in her own right". thehindu.com. மூல முகவரியிலிருந்து 15 ஏப்ரல் 2006 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._வி._கிரியேசன்ஸ்&oldid=3257744" இருந்து மீள்விக்கப்பட்டது