வி. பி. துரைசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. பி. துரைசாமி
திராவிட முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர்
பின்னவர்அந்தியூர் செல்வராஜ்
தமிழக சட்டமன்றத்தின், துணை சபாநாயகர்
பதவியில்
19 மே 2006 – 14 மே 2011
தொகுதிசங்ககிரி
பதவியில்
8 பெப்ரவரி 1989 – 30 சனவரி 1991
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
திராவிட முன்னேற்ற கழகம்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வேலைஅரசியல்வாதி

வி. பி. துரைசாமி (V. P. Duraisamy) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். அதிமுகவில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய இவர், அங்கிருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை உதறிவிட்டு திமுகவில் இணைந்தார். திராவிட முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளராக பதவி வகித்த இவரை, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டதால் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.[1]

இவர் 1989 முதல் 1991 வரை மற்றும் 2006 முதல் 2011 வரை திமுக சார்பில் தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவராகவும் பொறுப்புகளை வகித்தவர். இவர் பல சட்டமன்றக் குழுக்களுக்கான உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். 1995 - 2001 ஆண்டுகளில் சட்டமன்ற குழுத் தலைவராகவும் இருந்தார்.[2][3] இவர் 2012 திமுகவின் துணைப் பொதுச் செயலாளராகப் பதவியேற்றார்.[4] பின்னர் திமுகவிலிருந்து விலகி, 2020 மே 22 அன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பாஜகவில் இணைந்தார் வி.பி.துரைசாமி... திமுக திசைமாறிச் செல்வதாக விமர்சனம்". ஒன்இந்தியா தமிழ் (மே 22, 2020)
  2. "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of Tamil Nadu. Archived from the original on 2009-03-03. பார்க்கப்பட்ட நாள் 2021-08-26.
  3. "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of India.
  4. "திமுக துணை பொதுச் செயலாளராக விபிதுரைசாமி". தினமணி. https://www.dinamani.com/latest-news/2011/oct/27/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-409910.html. பார்த்த நாள்: 22 May 2020. 
  5. "தமிழக அரசியல்: திமுக கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட வி.பி. துரைசாமி பாஜகவில் இணைந்தார்". பிபிசி தமிழ். பார்க்கப்பட்ட நாள் 22 May 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பி._துரைசாமி&oldid=3571456" இலிருந்து மீள்விக்கப்பட்டது